×

காப்பீட்டு கழக ஊழியர் மாநாட்டில் தீர்மானம் ஒரு மாத ஓய்வூதியத்தை பொங்கல் பண்டிகை போனசாக வழங்க வேண்டும்

கும்பகோணம், ஜூன் 12: ஒரு மாத ஓய்வூதியத்தை பொங்கல் பண்டிகை போனசாக வழங்க வேண்டுமென ஓய்வூதியர் சங்க மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது. கும்பகோணத்தில் தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் மூன்றாவது வட்ட மாநாடு நடந்தது. வட்ட தலைவர் துரைராஜ் தலைமை வகித்தார். கூட்டத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், ஊதியக்குழு 21 மாதம் நிலுவை தொகையை உடனே வழங்க வேண்டும், ஒரு மாத ஓய்வூதியத்தை பொங்கல் பண்டிகை போனஷாக வழங்க வேண்டும். மாதம்தோறும் மருத்துவப்படி ரூ.1,000 வழங்க வேண்டும். மூத்த குடிமக்கள் அனைவரும் தமிழகம் முழுவதும் செல்ல இலவச பஸ்பாஸ் வழங்க வேண்டும். மருத்துவ சிகிச்சை திட்டம் ஓய்வூதியர்களுக்கு அனைத்து வகையிலும் பயன்பெறுமாறு பிற மாநிலங்களிலும் உள்ளதைபோல் தமிழக அரசு ஏற்று நடத்ம வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் அறிவித்துள்ள 9.2 டிஎம்சி தண்ணீரை விவசாய குறுவை சாகுபடிக்கு கிடைக்க மத்திய, மாநில அரசுகள் டவடிக்கை எடுக்க வேண்டும்.

தஞ்சை, நாகை, திருவாரூர் போன்ற டெல்டா மாவட்டங்களை சுடுகாடாக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். கும்பகோணத்தில் இருந்து சென்னை சென்றுவர போதுமான ரயில்கள் இயக்க வேண்டும். மாத்தி கேட், தாராசுரம் கேட், மாதுளம்பேட்டை ரயில்வேகேட் போன்ற பகுதிகளில் மேம்பாலம் அமைக்க வேண்டும். நகரம் முழுவதும் குடிநீர் குழாய் பதிக்கும் பணிக்காக சீர்குலைக்கப்பட்ட தெருக்களின் சாலைகளை சீரமைக்க வேண்டும். கும்பகோணத்தை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் அறிவிக்க வேண்டும். தமிழகத்தில் நிரப்பப்படும் காலி பணியிடங்களில் தமிழ்நாட்டில் வேலை இல்லாமல் வாழும் படித்த இளைஞர்களுக்கு வேலை வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டில் மாநில தலைவர் சுடலையாண்டி, மாவட்ட செயலாளர் ராஜகோபாலன் மற்றும் நிர்வாகிகள், 200க்கும் மேற்பட்ட ஓய்வூதியர்கள் பங்கேற்றனர்.

Tags : insurance company ,conference conference ,Pongal Festival ,
× RELATED அழகு நாச்சியம்மன் கோயில் பொங்கல் விழா