×

பட்டுக்கோட்டை நகர பகுதியில் ஷேர் ஆட்டோ வசதி ஏற்படுத்த வேண்டும்

பட்டுக்கோட்டை, ஜூன் 12: பட்டுக்கோட்டை நகர பகுதியில் ஷேர் ஆட்டோ வசதி செய்துதர வேண்டுமென பட்டுக்கோட்டையில் நடந்த காப்பீட்டு கழக ஊழியர் மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது. பட்டுக்கோட்டையில் காப்பீட்டு கழக ஊழியர் சங்க கிளை மாநாடு நடந்தது. கிளை தலைவர் பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். கிளை செயலாளர் சம்பத் ஆண்டறிக்கை வாசித்தார். நீலாயதாட்சி வரவேற்றார். கோட்ட சங்க துணை பொருளாளர் விஜயகுமார் தொடக்க உரையாற்றினார். கோட்ட சங்க பொதுச் செயலாளர் செல்வராஜ் நிறைவுரையாற்றினார். தீர்மானங்களை பாலசுப்ரமணியன் முன்மொழிந்தார்.மாநாட்டில் பாலிசி மீதான ஜிஎஸ்டி வரியை நீக்க வேண்டும். தமிழகத்தில் மத்திய, மாநில அரசு பணிகளில் 100 சதவீதம் தமிழகத்தை சார்ந்தவர்களுக்கே வேலை வழங்க வேண்டும். பட்டுக்கோட்டை நகர பகுதிகளில் ஷேர் ஆட்டோ வசதி செய்து தர வேண்டும். காரைக்குடி- பட்டுக்கோட்டை- திருத்துறைப்பூண்டி- திருவாருர் ரயில் சேவையை தொடர்ச்சியாக செயல்படுத்த வேண்டும். பட்டுக்கோட்டை - தஞ்சாவூர் புதிய அகல ரயில் சேவையை விரைவாக துவங்க வேண்டும்.

மாநில உரிமைகளை மீட்டெடுக்க வேண்டிய அவசியத்தை உணர்த்துவதாக அமைந்த மக்களவை தேர்தலில் தமிழக மக்களின் முடிவு இந்தியாவுக்கு ஓர் அரசியல் வழிகாட்டுவதாக அமைந்தமைக்கு தமிழக மக்களுக்கு நன்றி தெரிவிப்பது. பட்டுக்கோட்டை- தஞ்சாவூர், பட்டுக்கோட்டை- மன்னார்குடி புதிய அகல ரயில் பாதை இணைப்புக்கான வேலைகளை துவங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.பட்டுக்கோட்டை பேருந்து நிலையம் உடனே சீரமைக்க வேண்டும். பொதுமக்களை வாட்டும் எல்ஐசி பாலிசிக்கான ஜிஎஸ்டி வரியை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். காவிரி டெல்டா பகுதிகளில் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் எடுக்கும் மத்திய அரசின் முடிவை கைவிட வேண்டும். காவிரி டெல்டாவை விவசாய பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்க வேண்டும். கூடங்குளம் அணு உலையில் அணுக்கழிவுகளை சேர்க்கும் மத்திய அரசின் முடிவை கைவிட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ராஜேந்திரன் நன்றி கூறினார்.

Tags : town area ,Shared Auto Facilities ,Pattukottai ,
× RELATED பட்டுக்கோட்டை சிறுவன் கொரோனா வைரஸ்...