தொழிலாளி தற்கொலை

திருக்காட்டுப்பள்ளி, ஜூன் 12: திருக்காட்டுப்பள்ளி காவல் சரகம் அம்மையகரம் மேலத்தெருவை சேர்ந்தவர் சுந்தரராஜன் (49). மர வேலை செய்யும் தொழிலாளி. இவர் கடந்த 9ம் தேதி வீட்டில் இருந்த பூச்சிகொல்லி மருந்தை குடித்து ஆபத்தான நிலையில் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். இதுகுறித்து திருக்காட்டுப்பள்ளி காவல் நிலையத்தில் சுந்தரராஜன் மனைவி சுமதி (35) புகார் செய்தார் அதில் வயிற்று வலி தாங்க முடியாமல் கணவர் விஷம் குடித்ததாக தெரிவித்திருந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர்.

Tags :
× RELATED காயல்பட்டினம் அருகே தொழிலாளி தற்கொலை