மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் சார்பில் உலக சுற்றுச்சூழல் தின கொண்டாட்டம்

தஞ்சை, ஜூன் 12: தஞ்சாவூர் மலபார் கோல்ட் அண்ட் டைமண்ட் சார்பில் உலக சுற்றுச்சூழல் தினவிழா கொண்டாடப்பட்டது. இதில் தனது பசுமை முயற்சிகளின் ஒரு பகுதியாக இக்குழுமம், மலபார் கோல்ட் அண்ட் டைமண்ட்ஸ் ஊழியர்கள், வாடிக்கையாளர்களுக்கு மரக்கன்றுகளை வழங்கியது. மேலும் மரக்கன்றுகள் நட்டு வைக்கப்பட்டது. தஞ்சை ராஜா மிராசுதார் அரசு மருத்துவமனை தலைவர் டாக்டர் குமுதா லிங்கராஜ் மற்றும் அரசு மருத்துவமனை இருப்பிட மருத்துவர் உஷாதேவி மற்றும் மருத்துவ கண்காணிப்பாளர் பாரதி, துணை மருத்துவ கண்காணிப்பாளர் குமரன் மற்றும் அரசு மருத்துவமனை டாக்டர்கள் மற்றும் ஊழியர்கள் பங்கேற்றனர்.

சுற்றுச்சூழல் சமநிலையை குலைப்பது மனித குலத்துக்கும், உயிரினங்களுக்கும் அச்சுறுத்தலாக அமைகிறது. இதை மனதில் கொண்டு மலபார் குழுமம் தனது மோன்டனா எஸ்டேட் உள்ளிட்ட அனைத்து ரியல் எஸ்டேட் திட்டங்களை இயற்கையை நேசிப்போம், இயற்கைக்கு திரும்புவோம் எனும் கருத்தாக்கத்தின் அடிப்படையில் செயல்படுத்துகிறது என்று மலபார் குழும தலைவர் எம்.பி.அகமது கூறினார். மலபார் கோல்ட் அண்ட் டைமண்ட்ஸ் ரூ.30,000 கோடி மதிப்பிலான பல துறைகளில் செயல்படும் மலபார் குழுமத்தின் அங்கமாகும். அமெரிக்கா, யு.ஏ.இ, ஓமன், சவூதி அரேபியா, குவைத், பஹ்ரைன், சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளிலும் வலுவான செயல்பாடுகளை கொண்டுள்ளது. 250க்கும் மேற்பட்ட ஷோரூம்களை கொண்டுள்ளது. தனது லாபத்தில் 5 சதவீதத்தை சமூக பொறுப்புணர்வு செயல்பாடுகளுக்காக ஒதுக்கியுள்ளது.

× RELATED எம்ஜிஎம் பள்ளியில் யோகா தின கொண்டாட்டம்