×

விவசாயிகளுக்கு அழைப்பு ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக மனித சங்கிலி போராட்டத்துக்கு விசைப்படகு மீனவர்கள் ஆதரவு

சேதுபாவாசத்திரம் ஜூன்12:சேதுபாவாசத்திரம் அடுத்த மல்லிப்பட்டினத்தில் விசைப்படகு மீனவர்கள் சங்க கூட்டம் நடந்தது. தமிழ் மாநில மீனவர் பேரவை மாநில பொது செயலாளர் தாஜூதீன் தலைமை வகித்தார். சங்க செயலாளர் இப்ராஹிம், பொருளாளர் ஜெய்னுதீன் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில் விவசாயிகள், மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் ஹைட்ரோ கார்பன், மீத்தேன் திட்டத்தை எதிர்த்து நடைபெறும் மனித சங்கிலி போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிப்பது. உரிய ஆவணங்கள் இருந்தும் கள்ளிவயல்தோட்டம் 8 விசைப்படகுகளுக்கு நிவாரணம் வழங்காமல் நிறுத்தி வைத்திருப்பதை கண்டிப்பதுடன் விரைந்து வழங்க வேண்டும். கஜா புயலில் சேதமடைந்த படகுகளுக்கு பலருக்கு இன்சூரன்ஸ் நிறுவனம் இழப்பீடு வழங்கியுள்ளது.

இன்னும் ஒரு சிலருக்கு இழப்பீடு வழங்கவில்லை அவர்களுக்கும் வழங்க அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும். மல்லிப்பட்டினம் துறைமுக பணிகள் முடிந்த நிலையில் உள்ளது. துறைமுகம் அமைப்பதற்கு முன்பு தூண்டில் வளைவு அமைக்கப்படுமென உறுதியளித்த நிலையில் அதற்கான முயற்சி எதுவும் எடுக்காததால் படகுகளை பாதுகாக்க முடியாது. எனவே படகுகளை பாதுகாக்கும் வகையில் தூண்டில் வளைவு அமைக்க வேண்டும். தற்போது படகுகளுக்கு அரசு வழங்கியுள்ள ரூ.5 லட்சம் போதாது என்பதால் இன்னும் ரூ.5 லட்சம் வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. பயிர்களின் வளர்ச்சி பருவத்தில் நீர் தட்டுப்பாடு ஏற்படும்போது உயிர்நீர் பாசனம் செய்யவும், நிலத்தடி நீர்மட்டம் உயரவும், மழைநீர் சேகரிப்பு அமைப்பாகவும், பண்ணை குட்டைகள் மிகவும் பயனுள்ளதாக உள்ளது.

Tags : force fishermen ,Key ,
× RELATED ஒப்புகை சீட்டை முழுமையாக எண்ணக் கோரிய...