×

100 சதவீத மானியத்தில் 800 பண்ணை குட்டைகள் அமைக்க இலக்கு நிர்ணயம்

தஞ்சை, ஜூன் 12: 100 சதவீதம் மானியத்தில் வேளாண் பொறியியல் துறை மூலம் பண்ணைக் குட்டைகள் அமைக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தஞ்சை மாவட்டத்தில் 100 சதவீத மானியத்துடன் விவசாயிகளின் நிலங்களில் பண்ணை குட்டைகள் அமைக்க ரூ.8 கோடி நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. மழை காலங்களில் நிலத்தில் வழிந்தோடும் நீரை பண்ணை குட்டைகள் மூலம் சேகரித்து பயிர்களின் வளர்ச்சி பருவத்தில் நீர் தட்டுப்பாடு ஏற்படும்போது உயிர்நீர் பாசனம் செய்யவும், நிலத்தடி நீர்மட்டம் உயரவும், மழைநீர் சேகரிப்பு அமைப்பாகவும், பண்ணை குட்டைகள் மிகவும் பயனுள்ளதாக உள்ளது.

தமிழக அரசு, காவிரி டெல்டா விவசாயிகள் பயன்பெறும் வகையில் 2019-20ம் நிதியாண்டில் தஞ்சை மாவட்டத்துக்கு 800 பண்ணை குட்டைகளை ரூ.8 கோடி செலவில் அமைக்க இலக்கு நிர்ணயித்துள்ளது. தஞ்சை மாவட்டத்தில் அனைத்து வட்டாரங்களில் உள்ள விவசாயிகள் சம்பந்தப்பட்ட வருவாய் கோட்டத்தில் உள்ள உதவி செயற்பொறியாளர் (வே.பொ), தஞ்சாவூர், கும்பகோணம், பட்டுக்கோட்டை அலுவலகங்களை தொடர்பு கொண்டு விண்ணப்பங்களை அளிக்கலாம். விவசாயிகள் தங்களது புகைப்படம், ஆதார் கார்டு நகல், நிலத்தின் சிட்டா, அடங்கல், நில வரைப்படத்துடன் விண்ணப்பித்து பயன்பெறலாம். இவ்வாறு கலெக்டர் அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED திருவாரூர் – காரைக்குடி பயணிகள் ரயில்...