தலைஞாயிறு அருகே தீக்குளித்த பெண் சாவு

வேதாரண்யம், ஜூன் 12: வேதாரண்யம் தாலுகா தலைஞாயிறு அருகே தீக்குளித்த பெண் உயிரிழந்தார். வாட்டாக்குடி கீழக்கரை பகுதியை சேர்ந்தவர் துரைசாமி மகன் கோசிசன் (38). இவரது மனைவி வெண்மணி செல்வி (32). இவர் கடந்த 1ம் தேதி தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். அவரை காப்பாற்ற முயன்ற கோசிசனும் தீக்காயமடைந்தார்.

இருவரும் நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கோசிசன் கடந்த 7ம் தேதி உயிரிழந்தார். இந்நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த வெண்மணிச்செல்வியும் சிகிச்சைப பலன்றி உயிரிழந்தார். இதுகுறித்து தலைஞாயிறு போலீசார் வழக்கு பதிந்த விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags : Thayankandra ,
× RELATED சொந்த செலவில் சூனியம் வீடியோ காலில்...