×

முதியோர்கள் எதிர்பார்ப்பு விரைவில் சீரமைக்க கோரிக்கை சீர்காழியில் டாஸ்மாக் கடையால் போக்குவரத்து நெரிசல்

சீர்காழி, ஜூன் 12:சீர்காழி கொள்ளிடம் முக்கூட்டில் டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சீர்காழி கொள்ளிடம் முக்கூட்டு எப்போதும் மக்கள் நிறைந்த பகுதியாக காணப்படும். பல்வேறு பகுதிகளுக்கு செல்பவர்கள், பள்ளி, கல்லூரி செல்பவர்கள், அரசு ஊழியர்கள் இந்த பகுதியில் இருந்துதான் பேருந்தை பிடித்து சென்று வருகின்றனர். இத்தகைய நெரிசல் மிக்க மக்கள் அதிகளவில் வந்து செல்லும் பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த கடை மெயின் ரோட்டில் அமைக்கப்பட்டுள்ளதால் குடிமகன்களின் கூட்டம் தினமும் நிரம்பி வழிகிறது. இதனால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு விபத்துக்கள் நடந்து வருகின்றன. மேலும் குடிமகன்கள் மதுகுடித்துவிட்டு பாட்டில்களை சாலைகளில் உடைத்து விட்டு செல்வதால் ஆங்காங்கே உடைந்த பாட்டில்கள் சிதறிக் கிடக்கின்றன. இரவு நேரங்களில் சிதறிக்கிடக்கும் பாட்டில்கள் பலரது கால்களை பதம் பார்க்கிறது. குடிமகன்களுக்கு போதை தலைக்கேறிய உடன் சாலையை மறித்து அவ்வழியாக வருபவர்களை மிரட்டியும், துன்புறுத்தியும் வருகின்றன.

மேலும் போதையின் உச்சத்திற்கு சென்ற குடிமகன்கள் சாலைகளில் அரைகுறை ஆடையுடன் உருண்டு கிடப்பது வாடிக்கையாக இருந்து வருகிறது. குடிமகன்களின் தொல்லையால் இந்த சாலையை கடக்க மாணவ, மாணவிகள் பெண்கள் வியாபாரிகள் அச்சப்படுகின்றனர். டாஸ்மாக் கடை அருகே பல்வேறு கடைகள் அமைந்துள்ளன. இந்த கடைகளில் வாசல்களில் குடிமகன்கள் உட்கார்ந்து மது அருந்துவதால் வியாபாரம் பாதிக்கப்படுவதாக கடையின் உரிமையாளர்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர். மேலும் டாஸ்மாக் கடை அமைந்துள்ள பகுதியில் ஆஞ்சநேயர் மற்றும் பெருமாள் கோயில் அமைந்துள்ளதால் இந்த கோயில்களுக்கு செல்லும் பக்தர்கள் பல்வேறு சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
டாஸ்மாக் கடை அருகே மெடிக்கல் சென்டர் அமைந்திருப்பதால் குடிமகன்கள் ஆர்வக் கோளாறில் மெடிக்கலுக்கு சென்று மதுபாட்டில் கேட்கும் சம்பவமும் அரங்கேறி வருகிறது. கொள்ளிடம் முக்கூட்டு

டாஸ்மாக் கடையால் பல்வேறு சிரமங்களால் பரிதவிக்கும் பொதுமக்கள், மாணவ- மாணவிகள், வியாபாரிகள் நலன் கருதி டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து போராட்டங்கள் நடத்தியும் வருகின்றனர். ஆனால் இதனை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. வருமானத்தை மட்டுமே கணக்கில் எடுக்கும் அதிகாரிகள் மக்கள் படும் துயரத்தை கண்டுகொள்ளவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் டாஸ்மார்க் கடையை உடனே வேறு இடத்திற்கு மாற்ற மாவட்ட நிர்வாகம் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து தரப்பு மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : store ,
× RELATED ஆந்திராவில் குடும்பத்தினர் கண்ணெதிரே...