×

மயிலாடுதுறை அடுத்த மாப்படுகை சுடுகாடு கொட்டகைக்கு மேற்கூரை அமைத்துத்தர ஆர்டிஓவிடம் மனு

மயிலாடுதுறை, ஜூன் 12: மயிலாடுதுறை அடுத்த மாப்படுகை கிராம வாசிகள் கிராம மக்கள் சங்க தலைவர் ராமலிங்க தலைமையில் மயிலாடுதுறை ஆர்டிஓ கண்மணியை சந்தித்து மனு இளித்தனர். அதில் கூறியிருப்பதாவது: மாப்படுகை கிராமம் 500 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்தது. மயிலாடுதுறை ஒட்டியுள்ள நகர பகுதிகளை கொண்டதாகும். இங்கு வசிப்பவர்களுக்கு சுடுகாடு மற்றும் இடுகாட்டுக்கு பட்டா நிலங்கள் உள்ளது. அந்த மயானத்தில் அடிப்படை வாசதிகளான எரியூட்டு கொட்டகை, சாலை வசதி, சுற்றுச்சுவர் போன்ற அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை.
இடுகாட்டிற்கு செல்ல தனியார் நிலம் தர தயாராக இருந்தும் அதை கைப்பற்றி சாலை அமைத்து கொடுக்க அரசு இதுவரை முன்வரவில்லை. அதனால் அடிப்படை வசதிகள் இல்லாத சுடுகாட்டை பயன்படுத்தி வருகிறோம். மழை வந்தால் நாங்களே மேற்கூரை அமைத்து உடலை எரியூட்டும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளோம். ஆகவே ஆர் டி ஓ நேரடியாக வருகை தந்து இடத்தை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாப்படுகை கிராமத்தின் வழியாக செல்லும் முத்தப்பன் காவிரி ஆறு மூலம் சுமார் 10 ஆயிரம் ஏக்கர் பாசனம் பெற்று வந்தது. ஆனால் கடந்த 40 ஆண்டுகளாக ஆறு தூர்வாரப்படாமல் பாசன தண்ணீர் இல்லாமல் அப்படியே கிடக்கிறது. இதனால் நூற்றுக்கணக்கான குளம் கிணறுகளில் தண்ணீர் மட்டம் குறைந்து விட்டது.

பொதுப்பணித்துறை ஒத்துழைப்புடன் சென்றாண்டு அரசு குடிமராமத்து நிதியில் 25 சதவிகிதமும் பொதுமக்கள் நிதி 50 சதவீதம் வரை செலவு செய்து பணிகள் நடைபெற்றது. ஆனால் ஆக்கிரமிப்பு அதிகமாக உள்ளதால் 25 சதவீத பணிகள் நடைபெறவில்லை. ஆகவே ஆக்கிரமிப்புகளை அகற்றி தர வேண்டும். மேலும் இரண்டு பாலங்கள் உடைந்து பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத அளவுக்கு மோசமாக உள்ளது. மாணவர்களும் பொதுமக்களும் ஆற்றில் இறங்கி ஏறிச் செல்கின்றனர். மழை அல்லது காவிரிநீர் வருவதற்குள் இரண்டு பாலங்களையும் கட்டிக் கொடுக்க வேண்டும். பலமுறை வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு கொடுத்தும் அவர்கள் நடவடிக்கை இல்லை. அதேபோல கிராமத்தில் செல்லும் உட்புற சாலைகளில் ஆக்கிரமிப்புகள் இருப்பதால் அவற்றை அகற்றி தர வேண்டும்.

உட்புற சாலைகளில் 90 சதவீதம் மிக மோசமாகி நடப்பதற்கு லாயக்கற்றதாக உள்ளது. தாங்கள் நேரில் பார்வையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த பல ஆண்டு காலமாக மாவட்ட கலெக்டர், ஆர்டிஓ, தாசில்தார், ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் என அனைவருக்கும் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. ஆகவே தாங்கள் நேரில் வந்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.

Tags : Mayiladuthurai ,terrace ,RTO ,
× RELATED தேர்தலின்போது வாக்குச்சாவடி...