×

கலெக்டர் ஆய்வு கருணாநிதி பிறந்த நாளையொட்டி இலவச மருத்துவ முகாம்

காரைக்கால், ஜூன்12: தமிழக முன்னாள் முதல்வர் கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு காரைக்கால் திமுக சார்பில் சிறப்பு பொது மருத்துவமுகாம் நடைபெற்றது. தமிழக முன்னாள் முதல்வர் கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு காரைக்கால் மாநில திமுக மற்றும் டாக்டர் விக்னேஷ் சர்க்கரை நோய் மற்றும் பாத சிகிச்சை மையம் இணைந்து நடத்திய இலவச மருத்துவ முகாம் காரைக்கால் டிராமாகொட்டாகை தெருவில் நடைபெற்றது இந்த முகாமை முன்னாள் அமைச்சரும், மாநில கழக அமைப்பாளருமான நாஜிம் தலைமை வகித்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் கீதா ஆனந்தன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இந்த மருத்துவ முகாமில் 200 மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

Tags : Collector ,birthday ,camp ,Student Karunanidhi ,
× RELATED குடிநீர் பிரச்னைகளுக்கு...