நாகையில் பொறியியல் கல்லூரிக்கு மாணவர் சேர்க்கை சான்றிதழ் சரிபார்ப்பு பணி

நாகை, ஜூன் 12: நாகை வலிவலம் தேசிகர் பாலிடெக்னிக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள பொறியியல் கல்லூரிக்கு மாணவர்கள் சேர்க்கை சான்றிதழ் சரிபார்ப்பு பணியை கலெக்டர் சுரேஷ்குமார் ஆய்வு செய்தார். நாகை வலிவலம் தேசிகர் பாலிடெக்னிக் கல்லூரியில் நடப்பு ஆண்டிற்கு பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேருவதற்கு சான்றிதழ்கள் சரிபார்ப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுபோல் 42 சேவை மையங்கள் செயல்பட்டு வருகிறது.

இதில் இந்த மையம் 29 மையமாக உள்ளது. இந்த மையத்திற்கு பொறியியல் கல்லூரியில் சேர விரும்பும் மாணவர்கள் தங்களது சான்றிதழ்களை காண்பித்து சாரிபார்த்து வருகின்றனர். சான்றிதழ் சரிபார்ப்பிற்கு 1609 மாணவர்களுக்கு அழைப்பாணை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதில் இதுவரை 1157 மாணவர்கள் வந்துள்ளனர். 89 மாணவர்களின் சான்றிதழ்களில் குறைபாடு உள்ளதால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறுவதை கலெக்டர் சுரேஷ்குமார் பார்வையிட்டார். துணை கலெக்டர் (வருவாய் நீதிமன்றம்) முருகேசன், கல்லூரி முதல்வர் மணிசேகர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

More
>