×

இன்று தேரோட்டம் கோவில்பத்து கிராமத்தில் கஜா புயலால் பாதித்தவர்களுக்கு தென்னங்கன்று அமைச்சர் வழங்கினார்

வேதாரண்யம், ஜூன் 12: வேதாரண்யம் தாலுகா கோவில்பத்து கிராமத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட தென்னை விவசாயிகளுக்கு வேளாண் துறை சார்பில் தென்னங் கன்றுகளை ஜவுளித்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வழங்கினார். நிகழ்ச்சிக்கு நாகை மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார் தலைமை வகித்தார். சப்-கலெக்டர் மல்கிஷோர், வேளாண் இணை இயக்குநர் நாராயணசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கஜா புயலால் பாதிக்கப்பட்ட 499 விவசாயிகளுக்கு 12,293 தென்னங்கன்றுகள் வழங்கும் பணியை தொடங்கி வைத்தார். இதில் வேளாண் உதவி இயக்குநர் கருப்பையா, மக்கள் செய்தி தொடர்பு அலுவலர் செல்வகுமார், தலைஞாயிறு கூட்டுறவு வங்கி தலைவர் அவை. பாலசுப்பிரமணியன், மாவட்ட ஊராட்சி முன்னாள் உறுப்பினர் சண்முகராஜ், உள்ளிட்டடோர் பங்கேற்றனர்.

Tags : minister ,house ,victims ,village ,Ghazi ,Kovilpattu ,storm ,
× RELATED புதுச்சேரியில் அரசு நிலத்தில் பாஜக...