×

6 வாகனங்கள் பறிமுதல் அம்மன் கோயிலில் குத்துவிளக்கு பூஜை பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்

வேதாரண்யம், ஜூன் 12: பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என ஓய்வூதியர் சங்கம் வலியுறுத்தி உள்ளது. வேதாரண்யத்தில் தமிழ்நாடு அரசு அனைத்துறை ஓய்வூதிய சங்க 3வது வட்ட மாநாடு வட்ட தலைவர் குணசேகரன் தலைமையில் நடந்தது. வட்ட துணை தலைவர் சுப்பிரமணியன் வரவேற்றார். மாநாட்டில் மாவட்ட தலைவர் நடராஜன், மாவட்ட துணை தலைவர் ராஜமாணிக்கம், வட்ட செயலாளர் ராஜேந்திரன் மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட தொழிற் சங்க கூட்டமைப்பு தலைவர் சிவக்குமார், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஓய்வு ஊதியம் உள்ளிட்ட அனைத்து மூத்த குடிமக்களுக்கும் இலவச பஸ்பாஸ் வழங்க வேண்டும். வருவாய் கிராம உதவியாளர்கள், சத்துணவு ஊழியர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், முன்னாள் கிராம அதிகாரி மற்றும் ஊராட்சி செயலாளர்களுக்கு ரூ.9 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும். மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் அனைத்து நோய்களுக்கும் முழு செலவு ஏற்கும் வகையில் திருத்தம் செய்திட வேண்டும் மருத்துவ காப்பீட்டு திட்டம், கிராம உதவியாளர், சத்துணவு அங்கன்வாடி ஊழியர்களுக்கும் விரிவுப்படுத்த வேண்டும். டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக அறிவித்திட வேண்டும்.

ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை கைவிட வேண்டும். கஜா புயலால் பாதிக்கப்பட்டு அடிப்படை வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் இப்பகுதி மக்களுக்கு தென்னை, மாமரம், முந்திரி கன்றுகளை இலவசமாக வழங்குவதுடன் பராமரிப்பு செலவுக்கும் அரசு உதவிட வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மாவட்ட செயல்குழு உறுப்பினர் தங்கவேல் நன்றி கூறினார்.

Tags : Pooja Old Pension Scheme ,temple ,Amman ,lighthouse ,
× RELATED ஆற்காடு அருகில் திரவுபதி அம்மன்...