கடலூர் நகர் பகுதியில் இன்று குடிநீர் கட் கடலூர்,

ஜூன் 12:  கடலூர் பெருநகராட்சி ஆணையர் அரவிந்த்ஜோதி விடுத்துள்ள செய்திகுறிப்பு: கடலூர் திருவந்திபுரம், கேப்பர் மலை பகுதியில் உள்ள நீரேற்று நிலையம் பகுதியில் இன்று தமிழ்நாடு மின்சார வாரியம் மாதாந்திர பராமரிப்பு பணிகளை தொடர்ந்து மின் விநியோகம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நிறுத்தப்படுகிறது. இதை தொடர்ந்து கடலூர் பெருநகராட்சி மூலம் நீரேற்று நிலையங்கள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யும் பகுதிகளான முதுநகர், வண்டிப்பாளையம், மஞ்சக்குப்பம், வண்டிப்பாளையம், புதுப்பாளையம், தேவனாம்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று (12ம் தேதி) குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுகிறது. நாளை (13ம் தேதி) வழக்கம்போல் குடிநீர் வினியோகம் தொடரும் என்று தெரிவித்துள்ளார்.

Tags : Cuddalore ,
× RELATED கடலூர் பெண்ணையாற்றில் ஆற்றுத்திருவிழா கோலாகலம்