கடலூர் மேற்கு மாவட்டத்தில் உறுப்பினர் சீட்டு வழங்கல்

விருத்தாசலம், ஜூன் 12: திமுக கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர் கணேசன் எம்எல்ஏ வெளியிட்டுள்ள அறிக்கை: கடலூர் மேற்கு மாவட்டத்தில் ஒன்றியம், நகரம், பேரூர், ஊராட்சிகளில் திமுக உறுப்பினர் உரிமை சீட்டுகள் தலைமை பிரதிநிதி சென்னை தெற்கு மாவட்ட துணை செயலாளர்  பாலவாக்கம் விசுவநாதன் தலைமையில் வழங்கப்பட உள்ளது. அதன்படி வருகிற 14ம் தேதி காலை 9மணியளவில் மங்களூர் தெற்கு ஒன்றியத்திற்கு மங்களூர் ஜிவி திருமண  மண்டபத்திலும், 10மணிக்கு வடக்கு ஒன்றியத்திற்கு அடரி கேபிஎஸ் ரைஸ் மில்லிலும், மாலை 4 மணிக்கு பெண்ணாடம் மேற்கு ரதவீதியில் உள்ள ஓம்சக்தி திருமண மண்டபத்தில் நல்லூர் தெற்கு ஒன்றியத்திற்கும்,
15ம் தேதி 9மணிக்கு நெய்வேலி தொமுச அலுவலகத்தில் நெய்வேலி நகரத்திற்கும், 11 மணிக்கு காடாம்புலியூர் ராமலிங்கம் செட்டியார் மண்டபத்தில் பண்ருட்டி தெற்கு ஒன்றியத்திற்கும், மதியம் 2மணிக்கு நகர திமுக அலுவலகத்தில் பண்ருட்டி நகரத்திற்கும், 3மணிக்கு புதுப்பேட்டை சிவசக்தி திருமண மண்டபத்தில் அண்ணாகிராமம் ஒன்றியத்திற்கும், 4மணிக்கு நகர அலுவலகத்திலும் உறுப்பினர் சீட்டு வழங்கப்படும். 16ம் தேதி 10மணிக்கு வேப்பூர் லெமன் ஓட்டலில் நல்லூர் வடக்கு ஒன்றியத்திற்கும், 11மணிக்கு கருவேப்பிலங்குறிச்சி வசந்த மகாலில் விருத்தாசலம் தெற்கு ஒன்றியத்திற்கும், 2மணிக்கு மணவாளநல்லூர் கொளஞ்சியப்பர் கோயில் வைஷ்ணவி மகாலில் விருத்தாசலம் வடக்கு ஒன்றியத்திற்கும், 4மணிக்கு சிவபூஜா திருமண மண்டபத்தில் விருத்தாசலம் நகரத்திற்கும் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.

Tags : Caste Supply Chain ,Cuddalore West District ,
× RELATED புவனகிரி வட்டாரத்தில் நெல்லில்...