பண்ருட்டி அருகே ஆட்ேடா மீது கார் மோதி விபத்து பெண் உள்பட 7 பேர் படுகாயம்

பண்ருட்டி, ஜூன் 12: பண்ருட்டி மவுலியா நகர் பகுதியை சேர்ந்தவர் காசிம் (35). சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டி வருகிறார். இவர் நேற்று முன்தினம் வடலூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டு குடும்பத்தினருடன் ஆட்டோவில் திரும்பிக்கொண்டிருந்தார். நள்ளிரவு 12 மணியளவில் சென்னை-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பிள்ளையார்குப்பம் என்ற இடத்தில் வந்த போது வேகமாக வந்த கார் ஆட்டோவின் பின்புறம் மோதியது. இதில் ஆட்டோகவிழ்ந்து அதில் பயணித்த காசிம், அவரது மகன்கள் உமர்அலி (5), முகம்மது (2), முகம்மது ஆசிப் (40), இவரது மனைவி மெகருனிசா (32), ரம்லாத் (30), ஜிரானிசா (28) ஆகிய 7 பேரும் படுகாயம் அடைந்தனர். உடனடியாக அவர்கள் கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் விபத்து ஏற்படுத்திய கார் டிரைவர் காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த அருள்ராஜ் (22) என்பவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : car crash ,Panruti ,Adena ,
× RELATED மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட...