×

விளாத்திகுளத்தில் ஜமாபந்தி முகாம்

தூத்துக்குடி, ஜூன் 12: விளாத்திகுளத்தில் நடந்த ஜமாபந்தியில் கலெக்டர் சந்தீப்நந்தூரி கலந்து கொண்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார். தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து வருவாய் வட்டாட்சியர் அலுவலகங்களிலும் வருவாய் தீர்வாய கணக்கு முடிப்பு நிகழ்ச்சி (ஜமாபந்தி) நேற்று தொடங்கியது. விளாத்திகுளம் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் கலெக்டர் சந்தீப்நந்தூரி தலைமையில் நடந்த ஜமாபந்தியில் புதூர் உள்வட்டத்தை சேர்ந்த முத்துசாமிபுரம், கவுன்டன்பட்டி, சிவலார்பட்டி, வன்னிபட்டி, மெட்டில்பட்டி, செங்கோட்டை, பட்டிதேவன்பட்டி, குமாரசித்தன்பட்டி, மணியக்காரன்பட்டி, சென்னம்பட்டி, வௌவால்தொத்தி ஆகிய கிராமங்களை சேர்ந்த வருவாய் கணக்குகளை கலெக்டர் ஆய்வு செய்து பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். மனுக்களை சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் வழங்கி உடனுக்குடன் நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார்.

முன்னதாக வருவாய் தீர்வாய கணக்கு முடிப்பு நிகழ்ச்சி தொடங்கி வைக்கும் முகமாக வட்டாட்சியர் அலுவலகத்தில் கலெக்டர் சந்தீப்நந்தூரி மரக்கன்று நடவு செய்தார். மேலும் நில அளவை கருவிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜெயசீலி, துணை ஆட்சியர் (பயிற்சி) முத்துமாதவன், இணை இயக்குநர் (வேளாண்மை) மகாதேவன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) பாலசுப்பிரமணியம், விளாத்திகுளம் வட்டாட்சியர் ராஜ்குமார், தலைமையிடத்து துணை வட்டாட்சியர் நிஷாந்தினி, விளாத்திகுளம் பேரூராட்சி செயல் அலுவலர் தனசிங், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஹெலன் பொன்மணி, அரவிந்த் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Tags : Jamapanti ,camp ,Vilathikulam ,
× RELATED பண்ருட்டியில் அடுத்த எஸ். ஏரி பாளையம். கிராமத்தில் தேர்தல் புறக்கணிப்பு