×

வைகுண்டத்தில் ஆலோசனை கூட்டம் பூசாரிகள் நல வாரியத்தை செயல்படுத்த வேண்டும்

வைகுண்டம், ஜூன் 12:  தமிழ்நாடு கோயில் பூசாரிகள் நல சங்கத்தின் தூத்துக்குடி மாவட்ட பூசாரிகள் ஆலோசனை கூட்டம் வைகுண்டத்தில் நடந்தது. இதில் கோயில் பூசாரிகள் நலச்சங்க மாநில தலைவர் வாசு தலைமை வகித்தார். இதையடுத்து  தூத்துக்குடி மாவட்ட தலைவராக வீரமணி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். கூட்டத்தில், கிராமப்புற பூசாரி நல வாரியத்தின் பதவிக்காலம் 3 ஆண்டுகள் முடிந்து விட்டது. இதனால் பூசாரிகளுக்கு நலத்திட்ட உதவிகள் கிடைக்கப்படவில்லை. எனவே, வறுமையில் வாடும் பூசாரிகளின் நலன்கருதி நலத்திட்ட உதவிகளை உடனடியாக வழங்க வேண்டும்.

 பூசாரிகள் திட்டத்திற்காக சொற்ப நிதியை கூட ஒதுக்கவில்லை. இதனால் திருக்கோயில்களில் பணியாற்றும் பூசாரிகள் வறுமையில் உள்ளனர். எனவே, பூசாரிகள் நல வாரியத்தை உடனே செயல்படுத்த வேண்டும். பூசாரிகளுக்கு மாத ஊதியம் மற்றும் ஓய்வூதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கிராம பூசாரிகள் நலவாரியத்தின் மூலம் அடையாள அட்டை வழங்குவது போல் இந்து சமய அறநிலைத்துறை மூலம் அடையாள அட்டை பணி வரன்முறை மற்றும் மாத ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு கட்டுப்பாட்டில் இல்லாத போதிய வருமானம் இல்லாத பல்லாயிரக்கணக்கான திருக்கோயில்களுக்கு சலுகை கட்டணத்தில் மின்சாரம் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் தமிழ்நாடு கோயில் பூசாரிகள் நல சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பலர் பங்கேற்றனர்.

Tags : counseling meeting ,Boards Welfare Board ,
× RELATED பெங்களூருவில் நடைபெறவுள்ள...