×

கீழ ராமசாமியாபுரத்தில் விழிப்புணர்வு பேரணி

உடன்குடி, ஜூன் 12: கீழ ராமசாமியாபுரத்தில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணி  நடந்தது. மெஞ்ஞானபுரம் அடுத்த கீழ ராமசாமியாபுரத்தில் ஆரம்ப சுகாதார நிலையம், புனித அன்னாள் உயர்நிலைப் பள்ளி சார்பில் நடந்த இப்பேரணிக்கு மெஞ்ஞானபுரம் வட்டார மருத்துவ அலுவலர் அனிபிரிமின் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியை ரோஸ்லி வரவேற்றார். இதில் ஆர்வமுடன் பங்கேற்ற மாணவ, மாணவிகள் உள்ளிட்டோர் புகையிலை ஒழிப்பு குறித்து கோஷங்கள் எழுப்பினர். இதில் உதவி மருத்துவ அலுவலர் இன்சமாம் உல் ஹக், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் அருள்ராஜ், சுகாதார மேற்பார்வையாளர் சேதுபதி, பகுதி சுகாதார செவிலியர் ஜெபசீலி, கிராம சுகாதார செவிலியர் தங்கம் மற்றும் ஏராளமானோர் பங்கேற்றனர்.

Tags : Awareness rally ,Ramasamyapuram ,
× RELATED மாவட்ட நீதிமன்றம் சார்பில் சமரசம் குறித்த விழிப்புணர்வு பேரணி