×

சாத்தான்குளம் வங்கி மேலாளருக்கு பணிநிறைவு பாராட்டு

சாத்தான்குளம் ஜூன் 12: சாத்தான்குளம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மேலாளருக்கு  பணிநிறைவு பாராட்டு விழா நடந்தது. சாத்தான்குளம் ஐஓபி வங்கியில் மேலாளராக பணியாற்றிய மலையரசன் பணிநிறைவு பெற்றதையடுத்து அவருக்கு பாராட்டு விழா வங்கி வளாகத்தில் நடந்தது. வங்கி கிளை முதுநிலை மேலாளர் ஜெயமோகன் தலைமை வகித்தார், ஹரிநாராயணன், ராஜேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சாந்தி வரவேற்றார். சிவராம், சிந்து, ராதிகா, வட்டார மனிதநேயமன்ற செயலாளர் பால்துரை, ஜெயசிங், ஓய்வுபெற்ற ஆசிரியர் ஹமீதுஅலி ஓய்வு பெற்ற தாசில்தார் நடராஜன், ஓய்வுபெற்ற  பேரூராட்சி  செயல் அலுவலர் ராஜதுரை, கலுங்குவிளை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க இயக்குனர் அனிஸ்அந்தோனி பேசினர். தொடர்ந்து பணிநிறைவு அதிகாரிக்கு நினைவுப்பரிசு வழங்கப்பட்டது. இதில்  மரகதம்,மாடசாமி, பாஜ அமைப்பு ஒன்றிய பொதுச்செயலாளர் பரமசிவன், மருந்தாளுநர் நடராஜன் உள்ளிட்ட  பலர் பங்கேற்றனர். மலையரசன் ஏற்புரை வழங்கினார். லட்சுமணன் நன்றி கூறினார். ஏற்பாடுகளை வங்கி முதன்மை மேலாளர் சேகர், பணியாளர்கள் வெங்கடேசன்,சுப்பையா, வெல்சியா, அழகம்மாள் கதிர்வேல் செய்திருந்தனர்.

Tags : Sathankulam Bank Manager ,
× RELATED தனது உருவத்தை தத்ரூபமாக வரைந்து...