×

கும்மிடிப்பூண்டி டி.ஜெ.எஸ். மெட்ரிக் பள்ளியில் தீத்தடுப்பு ஒத்திகை

கும்மிடிப்பூண்டி, ஜூன் 12: கும்மிடிப்பூண்டி அடுத்த பெருவாயலில் உள்ள டி.ஜெ.எஸ் மெட்ரிக் பள்ளியில் தீத்தடுப்பு ஒத்திகை நேற்று நடைபெற்றது.
இந்த நிகழ்விற்கு டி.ஜெ.எஸ் கல்வி குழும தலைவர் டி.ஜெ.கோவிந்தராஜன் தலைமை தாங்கி தீத்தடுப்பு ஒத்திகையை துவக்கி வைத்தார். பள்ளி தாளாளர் டாக்டர் பழனி, கல்வி குழும இயக்குனர் தமிழரசன்,  முதல்வர் ஞானபிரகாசம், துணை முதல்வர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கும்மிடிப்பூண்டி தீயணைப்பு போக்குவரத்து அலுவலர் கே.ராமலிங்கம் தலைமையில் 15க்கும் மேற்பட்ட தீயணைப்பு துறையினர் பங்கேற்றனர்.
மேலும் மாணவர்கள் கற்ற பயிற்சியை பெற்றோர்களுக்கும், அக்கம் பக்கத்தாருக்கும் எடுத்துரைக்கவும் தீயணைப்பு நிலைய அலுவலர் செல்வராஜ் அறிவுறுத்தினார்.

Tags : school ,Metric ,
× RELATED மலபார் கடற்போர்: வடக்கு அரபிக்கடலில்...