செங்கல்பட்டு அருகே பைக்குகள் மீது கார் மோதி விபத்து

செங்கல்பட்டு, ஜூன் 12: மாமல்லபுரம் அடுத்த பூச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் முருகன் (32). சிற்ப தொழிலாளி. இவரது மனைவி செந்தமிழ்செல்வி (27).  நேற்று மதியம் முருகன், மனைவியுடன் செங்கல்பட்டில் உள்ள உறவினர் வீட்டுக்கு புறப்பட்டார். செங்கல்பட்டு - திருக்கழுக்குன்றம் சாலையில் சென்று கொண்டிருந்தனர். அதே நேரத்தில் செங்கல்பட்டு ராமகிருஷ்ண நகரை சேர்ந்தவர் லூயிஸ் (51). மானமதியில் போஸ்ட் மாஸ்டராக பணியாற்றி வருகிறார். நேற்று மாலை வேலை முடித்து லூயிஸ், தனது பைக்கில் வீட்டுக்கு புறப்பட்டார். மேலேரிப்பாக்கம் அருகே சென்று கொண்டிருந்தார்.

அப்போது, எதிரே செங்கல்பட்டில் இருந்து திருக்கழுக்குன்றம் நோக்கி வந்த வேகமாக வந்த கார், லூயிஸ் மற்றும் முருகன் சென்ற பைக் மீது மோதியது. இதில், 2 பைக்குகளில் வந்த 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். செந்தமிழ்செல்வி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதை பார்த்ததும், அப்பகுதி மக்கள், படுகாயமடைந்த முருகன், லூயிஸ் ஆகியோரை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். ஆனால், செல்லும் வழியிலேயே லூயிஸ்ன் பரிதாபமாக இறந்தார். முருகனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. புகாரின்படி செங்கல்பட்டு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து, அதிவேகமாக காரை ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்திய செங்கல்பட்டு அடுத்த திருமணியை சேர்ந்த வேதகிரி (51) என்பவரை கைது செய்தனர்.

Tags : car crash ,Chengalpattu ,
× RELATED காரைக்குடியில் வேகத்தடைகளால் ஏற்படும் விபத்துகள்