×

பராமரிப்பு பணி காரணமாக தாம்பரம், செங்கல்பட்டு மார்க்கத்தில் ரயில்கள் சேவையில் மாற்றம்

சென்னை, ஜூன் 12: வெவ்வேறு இடங்களில் நடக்கும் பராமரிப்புப்பணி காரணமாக ரயில்கள் இயக்கத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.இதுகுறித்து தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னை, எழும்பூர் - விழுப்புரம் வழித்தடத்திலுள்ள சிங்கபெருமாள் ேகாயில் பகுதியில் பராமரிப்புப்பணி நடக்கிறது. இதையொட்டி 12, 13, 14ம் ஆகிய தேதிகளில் சென்னை கடற்கரையில் இருந்து காலை 9.20 மணிக்கு புறப்படும் கடற்கரை ரயில் முழுவதும் ரத்து செய்யப்படுகிறது.  இதேபோல் சென்னை கடற்கரையில் இருந்து காலை 8.56, 9.38, 10.14, 11.2 மணிக்கு செங்கல்பட்டுக்கு புறப்படும் ரயில்கள் தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும். செங்கல்பட்டில் இருந்து காலை 10.50, 11.50, 12.15, 1 மணிக்கு கடற்கரைக்கு புறப்பட வேண்டிய ரயில்கள் மாறாக தாம்பரத்திலிருந்து கடற்கரைக்கு இயக்கப்படும்.

அரக்கோணம் - ஜோலார்பேட்டை மார்க்கத்தில் பராமரிப்புப்பணி நடக்கிறது. இதனால் 13ம் தேதி ஜெய்ப்பூர்-கோவை வாராந்திர சூப்பர்பாஸ்ட் ரயில் வாலாஜா சாலையில் இருந்து 110 நிமிடம் தாமதமாக இயக்கப்படும். ஹவுரா-எஸ்வந்தபூர் எக்ஸ்பிரஸ் ரயில் தலங்கையில் இருந்து 105 நிமிடம் தாமதமாக இயக்கப்படும். இதேபோல் 14ம் தேதி கமக்யா - யஸ்வந்தபூர் வாராந்திர ஏசி எக்ஸ்பிரஸ் ரயில் வாலாஜா சாலையில் இருந்து 25 நிமிடம் தாமதமாக இயக்கப்படும். 15ம் தேதி ஹவுரா- எஸ்வந்தபூர் எக்ஸ்பிரஸ் ரயில் வாலாஜா சாலையிலிருந்து 95 நிமிடம் தாமதமாக இயக்கப்படும்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : routes ,Tambaram ,Chengalpattu ,
× RELATED சிறப்பு ரயிலில் செல்வோர் சமூக...