×

போளூர் பெரிய ஏரியில் அனுமன் சிலை கண்டெடுப்பு பொதுமக்கள் தாசில்தாரிம் ஒப்படைப்பு

திருவண்ணாமலை, ஜூன் 12: போளூர் பெரிய ஏரியில் இரண்டரை அடி கருங்கல் அனுமன் சிலை கண்டுபிடிக்கப்பட்டு பொதுமக்கள் தாசில்தாரிடம் ஒப்படைத்தனர். திருவண்ணாமலை மாவட்டம், போளூர் பெரிய ஏரியில் சிறுவர்கள் மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது, தண்ணீருக்குள் காலில் ஏதோ தட்டுப்பட்டது. அங்கிருந்த இளைஞர்கள் வெளியே எடுத்து பார்த்த போது, இரண்டரை அடி உள்ள கருங்கல் அனுமன் சிலை என தெரியவந்தது.

இதுகுறித்து, போளூர் தாலுகா அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், மண்டல துணை தாசில்தார் ஆர்.முனிராஜ், வருவாய் ஆய்வாளர் ஜெ.ரமேஷ் விரைந்து சென்று ஏரியில் இருந்து எடுக்கப்பட்ட அனுமன் சிலையை எடுத்து வந்து தாசில்தார் பா.ஜெயவேலுவிடம் ஒப்படைக்கப்பட்டு தாலுகா அலுவலகத்தில் பாதுகாப்பாக வைத்தனர். மேலும், இந்த சிலை குறித்து பொதுமக்கள் யாரும் உரிமை கோரவில்லை. மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவிக்கப்பட்டு பின்னர், வேலூர் தொல்லியல் துறையில் ஒப்படைக்கப்படும் என தாசில்தார் தெரிவித்தார்.

Tags : Anandan ,lake ,Polur ,public ,Tasildari ,
× RELATED மருதுபாண்டியர்கள் சிலைக்கு திமுக நிர்வாகிகள் மரியாதை