வந்தவாசியில் திடீர் தீயால் சாலையோர மரங்கள் சேதம்

வந்தவாசி, ஜூன் 12: வந்தவாசி டவுன் திண்டிவனம் சாலை காளியம்மன் கோயில் எதிரில் சாலையோரம் இருந்த காய்ந்த புற்களில் நேற்று முன்தினம் இரவு திடீரென தீப்பற்றியது. அப்போது காற்று அதிகளவில் வீசியதால் தீ வடக்குப்புறமாக வேகமாக பரவியது. கொழுந்துவிட்டு எரிந்த இந்த தீயில் சாலையோரமிருந்த சில மரங்கள் கருகின.

தகவலறிந்த வந்தவாசி தீ அணைப்புத்துறையினர் விரைந்து வந்து தீ மேலும் பரவாமல் தடுத்தனர். தீ வடக்குப்புறமாக பரவியதால் தெற்குப்புறமாக இருந்த மரம் அறுக்கும் பட்டரை, டிரான்ஸ்பார்மார், கடைகள், வீடுகள் தீயிலிருந்து தப்பின. மர்ம நபர்கள் திட்டமிட்டு தீ வைத்தார்களா என வந்தவாசி தெற்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் விசாரணை நடத்தி வருகிறார்.

Tags :
× RELATED வலங்கைமான் பேரூராட்சி பகுதியில்...