மகளிர் குழுக்கள் என்ற பெயரில் செயல்படும் பெண்ணிடம் 14 பவுன் செயின் பறித்த 2 பேர் படங்களை வெளியிட்டு தகவல் அளிக்க அழைப்பு மாநகர போலீஸ் அறிவிப்பு

திருச்சி, ஜூன் 11: திருச்சி கருமண்டபத்தில் பைக்கில் சென்ற பெண்ணிடம் மர்மநபர்கள் 14 பவுன் ெசயின் பறித்த காட்சிகள் அருகில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி இருப்பது தெரியவந்ததால் படங்களை போலீசுக்கு தெரிவிக்கும்படி மாநகர காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. திருச்சி-திண்டுக்கல் மெயின்ரோடு கருமண்டபம் அருகில் கடந்த மே 26ம் தேதி மகனுடன் பைக்கில் பின்னால் அமர்ந்து சென்ற 50 வயது மதிக்கதக்க பெண்ணின் கழுத்தில் அணிந்திருந்த 14 பவுன் செயினை பின்னால் பைக்கில் வந்த 2 மர்ம நபர்கள் பறித்துச் சென்றனர். இதுகுறித்து கன்டோன்மென்ட் குற்றப்பிரிவு போலீசில் வழக்குபதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

இதில் செயினை பறித்த இடத்தில் இருந்த சிசிடிவி கேமரா மூலம் குற்றவாளிகளின் படம் பதிவாகி உள்ளது. இந்த படத்தில் உள்ளவர்கள் குறித்து தகவல் அறிந்தால் கன்டோன்மென்ட் குற்றப்பிரிவு எண் 0431-2417200, குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் 94439 77572, நவீன காவல் கட்டுப்பாட்டு  அறை 0431-2418070, நுண்ணறிவு பிரிவு 94981 00615 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு தகவல் அளிக்கலாம். தகவல் அளிப்பவர்களின் ரகசியம் காக்கப்படும். இவ்வாறு மாநகர கமிஷனர் அலுவலக செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 

Tags : gangs ,
× RELATED தெப்பத்திருவிழா 27ல் துவக்கம் முன்னேற்பாடு பணிகள் மும்முரம்