13ம் தேதி நடக்கிறது பள்ளி முன் வேகத்தடை அமைத்து விபத்துகளை தடுக்க நடவடிக்கை

தஞ்சை மாவட்டம் மதுக்கூர் மண்டலக்கோட்டை பகுதியில் உள்ள தனியார் தொடக்கப்பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வருபவர் அவந்திகா (10). இவர் தனது தந்தை இளஞ்செழியனுடன் பள்ளி சீருடையில் வந்து மனு அளித்தார். அதில் நான் படித்து வரும் பள்ளியில் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். இந்த பள்ளி, மதுக்கூர் அருகே பட்டுக்கோட்டை- மன்னார்குடி தேசிய நெடுஞ்சாலையில் கண்ணனாறு பகுதியில் அமைந்துள்ளது. பள்ளி முன்பு வேகத்தடை அமைக்கப்படாதால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இதுகுறித்து அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. மேலும் பள்ளி முன்பு பழுதான வாகனங்கள் பொதுமக்களுக்கு இடையூறாக நிறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆய்வு செய்து பள்ளி முன்பு வேகத்தடை அமைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

Tags : accidents ,
× RELATED திருத்தணி கோட்ட நெடுஞ்சாலையில் சாலை ஓர முட்புதர்களால் விபத்து அபாயம்