சீருடையில் வந்து மாணவி மனு பருத்தி விவசாயிகளுக்கு விழிப்புணர்வு பயிற்சி

பாபநாசம், ஜூன் 11: பாபநாசம் அடுத்த கோபுராஜபுரத்தில் பருத்தி சாகுபடி விவசாயிகளுக்கு விழிப்புணர்வு முகாம் நடந்தது. பாபநாசம் வேளாண் உதவி இயக்குனர் மோகன் பேசுகையில், பாபநாசம் வட்டாரத்தில் நடப்பு பருவத்தில் 1,000 ஏக்கர் பரப்பில் பருத்தி சாகுபடி செய்யப் பட்டுள்ளது. இதில் பெரும்பான்மையாக வீரிய ஒட்டுரக பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது கடும் வறட்சியால் பூக்கள் உதிருதல் மற்றும் சாறு உறிஞ்சும் பூச்சிகளின் பாதிப்பு தென்படுகிறது.
பிரதம மந்திரி நுண்ணீர் பாசன திட்டத்தின்கீழ் பருத்தி சாகுபடி விவசாயிகளுக்கு தெளிப்புநீர் கருவி மற்றும் மழைத்தூவான் ஆகியவற்றை கொண்டு பயிர் மட்டத்துக்கு மேலாக நீர் பாய்ச்சுவதால் சாறு உறிஞ்சும் பூச்சிகளின் தாக்குதலை குறைக்கவும், பூக்கள் உதிர்வதை தடுக்கலாம். மழைத்தூவான் கருவியை நிறுவி பாசனம் செய்வதால் வறட்சியின் பிடியிலிருந்தும், சாறு உறிஞ்சும் பூச்சியிடமிருந்தும் பருத்தி பயிரை காப்பாற்றலாம் என்றார். வேளாண் அலுவலர் ஜெகதீஸ்வர், வேளாண்மை உதவி அலுவலர் கரிகாலன், அட்மா அலுவலர் தனசேகரன் பங்கேற்றனர்.

பிள்ளை வாய்க்கால் தூர்வாரும் பணியை தரமாக செய்ய வேண்டும்:
வரகூர் அம்மையகரத்தை சேர்ந்தவரும், காவிரி டெல்டா விவசாயிகள் சங்க தலைவருமான ரவிச்சந்திரன் மனு அளித்தார். அதில் ரூ.15 கோடி மதிப்பில் வெண்ணாறு பாசனம், பிள்ளைவாய்க்கால் பணி நடந்து வருகிறது. ஆனால் ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் அளவீடு செய்யாமல் நடக்கிறது. மேலும் உரிய அகலமில்லாமலும், ஆழமில்லாமலும் பணிகள் நடப்பதால் தண்ணீர் வந்தாலும் விவசாயத்துக்கு பிரயோஜனமில்லாமல் போய்விடும். இந்த பணியில் ஈடுபடுவோர் வாய்க்கால் ஓரங்களில் உள்ள பல லட்ச ரூபாய் மதிப்புள்ள மரங்களை வெட்டி எடுத்து சென்று விடுகின்றனர். மேலும் அம்மையகரம் வாய்க்கால் போன்ற கிளை வாய்க்கால்களில் உடைந்துள்ள மதகுகளை சீரமைக்க வேண்டும். கண்டமங்கலத்தில் உள்ள ஷட்டர்களை புதிதாக அமைக்க வேண்டும். எனவே ரூ.15 கோடியில் வெண்ணாறு பாசன பிள்ளைவாய்க்கால் துார்வாரும் பணியை தரமானதாக செய்ய வேண்டும், இப்பணியை கலெக்டர் ஆய்வு செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : cotton farmers ,
× RELATED கைதிகளை கட்டுப்படுத்த சிறப்பு பயிற்சி