×

சுற்றுலா பயணிகள் கவலை பேராவூரணி பகுதியில் உள்ள கடைகளில் ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல்

பேராவூரணி, ஜூன் 11: பேராவூரணி கடைவீதியில் உள்ள கடைகளில் ஆய்வு செய்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த ரூ.15 ஆயிரம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. பேராவூரணி பகுதியில் உள்ள கடைகள், உணவு விடுதிகளில் வட்டார மருத்துவ அலுவலர் சவுந்தரராஜன் தலைமையில் சுகாதார துறையினர் ஆய்வு செய்தனர். அப்போது கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்று ஆய்வு செய்தனர். ஆய்வின்போது தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டது.

பின்னர். ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்து கடைக்காரர்களுக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இதைதொடர்ந்து உணவு விடுதிகளில் பொது சுகாதாரம் பேணப்படுகிறதா, கழிவுநீர் முறையாக அகற்றப்படுகிறதா என்றும் ஆய்வு செய்தனர். வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சந்திரசேகரன், சுகாதார ஆய்வாளர்கள் உடனிருந்தனர். கும்பகோணம்:  கும்பகோணம் பழனியாண்டவர் சன்னதி தெருவை சேர்ந்தவர் சந்தானகிருஷ்ணன் (39). இவர் கும்பகோணம் புதிய பேருந்து நிலையத்தில் பெட்டிக்கடை வைத்துள்ளார். இந்நிலையில் இவரது கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை செய்வதாக கும்பகோணம் மேற்கு போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து அந்த கடையில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது கடையில் விற்பனைக்காக ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை வைக்கப்பட்டிருந்தது. இதைடுத்து புகையிலையை பறிமுதல் செய்ததுடன் சந்தான கிருஷ்ணனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Travelers ,area ,Perravurani ,
× RELATED குஜராத் ராஜ்கோட் பகுதியில் வணிக வளாக...