×

திருவையாறில் கருணாநிதி பிறந்த நாள் பொதுக்கூட்டம்

திருவையாறு, ஜூன் 11: திருவையாறு தேரடியில் வடக்கு ஒன்றிய பேரூர் திமுக சார்பில் கருணாநிதி பிறந்த நாள் பொதுக்கூட்டம் நடந்தது. தலைமை செயற்குழு உறுப்பினர் நாகராஜன் தலைமை வகித்தார். பொதுக்குழு உறுப்பினர் அரசாபகரன், வடக்கு மாவட்ட அவைத்தலைவர் தண்டபாணி முன்னிலை வகித்தனர். வடக்கு ஒன்றிய செயலாளர் சிவசங்கரன் வரவேற்றார். தேர்தல் பணிக்குழு செயலாளர் கம்பம் செல்வேந்திரன், முன்னாள் மத்திய நிதித்துறை இணை அமைச்சரும், தஞ்சை எம்பியுமான எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், வடக்கு மாவட்ட செயலாளர் கல்யாணசுந்தரம், தெற்கு மாவட்ட செயலாளர் துரை.சந்திரசேகரன் பேசினர். பேரூர் இளைஞரணி அமைப்பாளர் முகில்வேந்தன் நன்றி கூறினார்.

Tags : Karunanidhi ,meeting ,Thiruvaiyar ,
× RELATED இந்தத் தேர்தல் களத்தின் ஆட்ட நாயகன்...