×

லட்சக்கணக்கான ரூபாய் இழப்பு வைகை நதி கரையில் பிரதிஷ்டை செய்வதற்காக கும்பகோணத்தில் இருந்து மதுரைக்கு பஞ்சலோக அம்மன் சிலை ரதம் புறப்பாடு

கும்பகோணம், ஜூன் 11: மதுரையில் வைகை பெருவிழா ஜூலை 24ம் தேதி நடக்கிறது. அதற்காக வைகை நதி கரையில் பஞ்சலோக அம்மன் சிலை பிரதிஷ்டை செய்யப்படவுள்ளது. இதையொட்டி கும்பகோணம் பகவத் படித்துறையில் இருந்து மதுரைக்கு வைகை அம்மன் புறப்பாடு நிகழ்ச்சி நேற்றுமுன்தினம் நடந்தது. இதுகுறித்து அகில பாரத துறவியர் சங்க பொறுப்பாளர்கள் கூறுகையில், சுற்றச்சூழலுக்கும், இயற்கைக்கும் எதிராக மக்கள் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றனர். இந்நிலை மாறினால் மட்டுமே வருங்காலங்களில் வழக்கமான பருவமழையை நாம் பெற முடியும்.

எனவே மதுரையில் உள்ள வைகை நதிக்கரையில் வைகை அம்மன் பஞ்சலோக சிலையை வைக்க அகில பாரத துறவியர் சங்கம் ஏற்பாடு செய்தது. ஒன்றரை அடி உயரமுள்ள இந்த சிலை நேற்று மாலை மதுரைக்கு புறப்பட்டு செல்கிறது. 4 துறவிகளுடன் செல்லும் இந்த சிலை வருகிற 14ம் தேதிக்குள் மதுரை சென்றடையும் என்றார். பட்டுக்கோட்டை, ஜூன் 11: அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் சம்பளம் இல்லையென மிரட்டும் போக்கை கைவிட வலியுறுத்தி பட்டுக்கோட்டை சார்நிலை கருவூல அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க பட்டுக்கோட்டை வட்ட தலைவர் அறிவழகன் தலைமை வகித்தார். மாவட்ட துணைத்தலைவர் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார. ஆர்ப்பாட்டத்தை கருவூல கணக்குத்துறை மாநில தலைவர் பாலகிருஷ்ணன் துவக்கி வைத்தார். ஆர்ப்பாட்டத்தில் சந்தேகத்துக்கு அப்பாற்பட்ட வகையில் புதிய மென்பொருள் தயாராகும் வரை பழைய மென்பொருளிலேயே சம்பள பட்டியலை தயாரிக்க அனுமதி கோரியும், கார்ப்பரேட் நிறுவனமான விப்ரோவின் ஒப்பந்தத்தை ரத்து செய்து தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டுமென வலியுறுத்தப்பட்டது. பல்கலைக்கழக ஆசிரியர் சங்க உறுப்பினரும், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக ஆட்சி மன்றக்குழு உறுப்பினருமான சொக்கலிங்கம், தமிழ்நாடு கிராம உதவியாளர் சங்க மாநில அமைப்பு செயலாளர் நல்லதம்பி ஆகியோர் கண்டன உரையாற்றினர். அரசு ஊழியர் சங்க வட்ட பொருளாளர் ஜெயக்குமார் நன்றி கூறினார்.

Tags : Panchalakha Amman ,Kumbakonam ,Madurai ,river ,Vaigai ,
× RELATED கும்பகோணம் ஆதிவராகப்பெருமாள் கோயிலில் பங்குனி உத்திர தெப்போற்சவம்