நாளை முதல் துவக்கம் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்

கும்பகோணம், ஜூன் 11: ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டுமென கும்பகோணம் ஆர்டிஓ வீராசாமியிடம் மக்கள் அரசு கட்சி மாவட்ட தலைவர் ராஜ்குமார் மற்றும் கட்சியினர் மனு அளித்தனர்.

தஞ்சை மாவட்டம் விவசாய தொழிலையே நம்பியுள்ளது. இந்நிலையில் விளை நிலங்களுக்கு கீழே பூமிக்கு அடியில் உள்ள ஹைட்ரோ கார்பன், மீத்தேன், ஈத்தேன் இயற்கை வாயு ஆகியவற்றை எடுப்பதற்கு தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மத்திய அரசு ஒப்பந்தம் போட்டுள்ளது.

மண்ணின் கீழே உள்ள கனிம வளங்களை உறிஞ்சி எடுக்கும்போது மண்ணின் தன்மை முற்றிலும் மாறிவிடும். மேலும் நீர், காற்று ஆகியவை மாசுபட வாய்ப்புள்ளது. அத்துடன் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். இதேநிலை நீடித்தால் மக்கள் நாடோடிகளாக மாறிவிடுவர். எனவே தஞ்சை மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு போடப்பட்டிருக்கிற ஒப்பந்தத்தை ரத்து செய்வதற்கு உடனடியாக தமிழக அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும். இதன்மூலம் விவசாயிகளின் வாழ்வாதாரம் காப்பாற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>