×

அதிகாரி பேச்சுவார்த்தையால் வாபஸ் ஊதிய உயர்வு கேட்டு நகராட்சி துப்புரவு தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டம் குடந்தை நகரம் முழுவதும் குவிந்து கிடக்கும் குப்பைகள்

கும்பகோணம், ஜூன் 11: ஊதிய உயர்வு கேட்டு கும்பகோணத்தில் துப்புரவு பணியாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை துவங்கியுள்ளனர். இதனால் நகரம் முழுவதும் அள்ளப்படாமல் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. கும்பகோணம் நகராட்சியில் 1996ம் ஆண்டு முதல் ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்கள் வேலைபார்த்து வருகின்றனர். இதைதொடர்ந்து கும்பகோணம் நகராட்சியில் உள்ள 45 வார்டில் உள்ள குப்பைகளை சேகரிக்கும் பணியை தனியார் நிறுவனம் ஏற்று நடத்தி வருகிறது.
இதன்படி நகராட்சி துப்புரவு பணியாளர்கள் அனைவரும் தனியார் நிறுவனத்திடம் ஊதிய ஒப்பந்தம் செய்து வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் தனியார் நிறுவனத்துக்கும் துப்புரவு பணியாளர்களுக்கும் ஊதிய உயர்வு ஒப்பந்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து வந்தது.

ஆனால் பேச்சுவார்த்தையில் எந்தவித முன்னேற்றமும் இல்லாததை தொடர்ந்து துப்புரவு பணியாளர்கள் அனைவரும் நேற்று அதிகாலை தனது பணியை முன்னறிவிப்பின்றி நிறுத்தி விட்டு 300 பேர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். மேலும் தனியார் நிறுவன அதிகாரிகளின் வேலை நெருக்கடி, வேலைப்பளுவை கண்டித்து கும்பகோணம் கார்னேஷன் மருத்துவமணை அருகில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். உள்ளாட்சி ஊழியர்களின் நடவடிக்கைக்குழு தலைவர் ஜெயராமன் தலைமை வகித்தார். இதில் 200 பெண்கள் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் பங்கேற்றனர். இதனால் 45 வார்டுகளில் உள்ள 25 ஆயிரம் வீடுகளில் குப்பைகளை சேகரிக்கும் பணி பாதிப்படைந்ததால் நகரம் முழுவதும் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதுகுறித்து கும்பகோணம் நகராட்சி ஆணையர் ஜெகதீசன் (பொ) கூறுகையில், குப்பைகள் அள்ளும் பணியை தனியார் நிறுவனம் ஏற்று நடத்தி வருகிறது. இதுகுறித்து அந்த நிறுவன அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். விரைவில் துப்புரவு பணியாளர்கள் அனைவரும் பணிக்கு திரும்புவர் என்று எதிர்பார்க்கிறோம் என்றார்.

Tags : cleaning workers ,negotiations ,
× RELATED மாநிலங்களவை சீட் வேண்டும் என்பதில்...