×

காளியம்மன் கோயிலில் பால்குட திருவிழா

பாபநாசம், ஜூன் 11: பாபநாசம் பத்ர காளியம்மன் கோயில் திருவிழா கடந்த 3ம் தேதி துவங்கியது. இந்நிலையில் நேற்று முன்தினம் பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பின்னர் கோயில் தேரோட்டம் நடந்தது. நேற்று அம்மன் திருநடன வீதியுலா நடந்தது. இன்று மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது. அ இதேபோல் பாபநாசம் அருகே விழுதியூர் சியாமளாதேவி கோயில் திருவிழாவையொட்டி நேற்று முன்தினம் பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பின்னர் சுவாமிக்கு பாலாபிஷேகம் நடந்தது. இரவில் அம்மன் வீதியுலா நடந்தது. நேற்று மஞ்சள் நீராட்டு விழா நடந்தது.

இதேபோல் மெலட்டூர் அடுத்த அத்துவானப்பட்டி காமாட்சி அம்மன் கோயில் திருவிழாவையொட்டி கடந்த 8ம் தேதி பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.உளுந்து சாகுபடி அதிகளவு செய்து வரும் கீழவன்னிப்பட்டுவை சேர்ந்த விவசாயியியும், அதிமுக முன்னாள் ஊராட்சி தலைவருமான துரை.ராஜேந்திரன் கூறும்போது: ஒரத்தநாடு வேளாண் கோட்டத்தில் வழங்கப்பட்ட ஆடுதுறை- 5 ரக உளுந்து விதைகளை வாங்கி அதிகளவு சாகுபடி செய்திருக்கிறேன். இந்த சாகுபடியில் உளுந்து விதை தரமானதாக இல்லை. இதனால் பூக்கள் பூக்கவில்லை.

செடிகள் மட்டுமே அதிகளவு வளர்ந்திருக்கிறது. இந்த சாகுபடியில் மஞ்சள் தேமல் நோய் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. வேளாண்துறை ஆலோசனையின்படி 2 முறை மருந்து தெளித்தும், பூச்சிக்கொல்லி தெளித்து கட்டுப்படுத்தியும் பலனில்லை. ஒரத்தநாடு அதிகாரிகளிடம் தெரிவித்தபோது உங்களுக்கு மட்டும் இந்த பாதிப்பில்லை. அனைத்து பகுதி விவசாயிகளுக்கும் உள்ளது என்கின்றனர். எனவே தரமான விதைகளை வழங்கி விவசாயிகளை காப்பாற்ற வேண்டும் என்றார். உளுந்து விதை தரமானதாக இல்லை

Tags : Festival ,Kaliamman ,
× RELATED கரிய காளியம்மன் கோயிலில் தீமிதி விழா