×

திருவெண்ணெய்நல்லூர் ஒன்றியத்தில் குடிநீர் குழாய்

திருவெண்ணெய்நல்லூர், ஜூன் 11:   திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள மணக்குப்பம், தி.புதுப்பாளையம், சி. மெய்யூர், தி.கொணலவாடி, அருங்குறுக்கை உள்ளிட்ட கிராமங்களில் திருக்கோவிலூர் எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து
ரூ.10லட்சம் மதிப்பிலான நிதி ஒதுக்கீடு செய்து மினிடேங்க், சிமென்ட் சாலை ஆகியவை அமைக்கப்பட்டது. இதை விழுப்புரம் மத்திய மாவட்ட செயலாளரும், திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினருமான பொன்முடி நேற்று காலை பொது மக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். இதில் மேற்கு ஒன்றிய செயலாளர் விசுவநாதன், நகர செயலாளர் பூக்கடை கணேசன், ஒன்றிய பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி, ஒன்றிய துணை செயலாளர்கள் சுதா சீனுவாசன், காசிநாதன், ஏழுமலை, மாவட்ட பிரதிநிதிகள் சடகோபன், மோகன்ராஜ், மாதவன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் நிர்மல்ராஜ், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் அன்பழகன், நகர இளைஞரணி அமைப்பாளர் சுரேஷ்,  ஊராட்சி செயலாளர்கள் சோமசுந்தரம், சுந்தர், ராஜாராம், கோபால், குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Thiruvannai Nellore Union ,
× RELATED பாலியல் பலாத்காரம் செய்து சிறுமியை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை