அண்ணனை தாக்கிய சகோதரன் கைது

திருக்கோவிலூர், ஜூன் 11:  திருக்கோவிலூர் அடுத்த ஆலம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி(40). இவரும் அதே பகுதியை சேர்ந்த குமார்(38) என்பவரும் அண்ணன், தம்பிகள் ஆவார்கள். இந்த நிலையில் சம்பவத்தன்று இவர்கள் இருவரும் அருகே உள்ள வி.சித்தாமூர் கிராமத்தில் உள்ள நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது இவர்களுக்கு பொதுவாக உள்ள வரப்பினை குமார் கலைத்துள்ளார். இதனை சுப்பிரமணி கண்டித்துள்ளார். இதனால் இவர்
களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் குமார் மண்வெட்டியால் சுப்பிரமணியை தாக்கியுள்ளார். இதில் அவருக்கு தலையில் பலத்த அடிப்பட்டதுடன், பல்லும் உடைந்தது. இதில் காயமடைந்த சுப்பிரமணி சிகிச்சைக்காக திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து சுப்பிரமணி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் குமார் மீது வழக்கு பதிந்து அவரை கைது செய்தனர்.

Tags :
× RELATED அண்ணனை மண்வெட்டியால் தாக்கிய தம்பி கைது