×

எம்ஆர்கே சர்க்கரை ஆலை பணியாளர் குடியிருப்பு கட்டிடத்தில் விரிசல்

சேத்தியாத்தோப்பு, ஜூன் 11: சேத்தியாத்தோப்பு நகரில் எம்ஆர்கே கூட்டுறவு சர்க்கரை ஆலை உள்ளது. ஆண்டுக்கு சுமார் 3 முதல் 5 லட்சம் டன் கரும்பு அரவை நடக்கும் சர்க்கரை ஆலையாகும். இந்த ஆலையில் விலையுயர்ந்த இரும்பு தளவாட பொருட்கள், தேய்மான இரும்பு பொருட்கள் போன்றவை ஏராளமாக குவித்து வைக்கப்பட்டுள்ளது. சர்க்கரை சேமிப்பு  கிடங்குகளில் டன் கணக்கில் சர்க்கரை மூட்டைகள் வைக்கப்பட்டுள்ளது. நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றி வரும் இந்த சர்க்கரை ஆலையின் உள்பகுதியில் கருவேலமரங்களும், முட்புதர்களும் அடர்ந்து வளர்ந்துள்ளது. மேலும், இங்கு ஆலை பணியாளர்கள் மற்றும் அதிகாரிகளுக்கான குடியிருப்புக்களும் உள்ளது. இந்த குடியிருப்புகள் தற்போது விரிசல் ஏற்பட்டும், சேதமடைந்தும் இருக்கிறது. ஆலையின் உள்பகுதியில் கரும்பு விவசாயிகளுக்காக மாதிரி கரும்புத்தோட்டம் ஏற்படுத்தப்படவில்லை. இதுபோல் ஆலையை சுற்றி பாதுகாப்பு சுற்றுச்சுவர் இல்லை. சுற்றுச்சுவர் கட்டி ஆலையில் இருக்கும் கருவேல மரங்களை அகற்ற வேண்டும், குடியிருப்புகளை சீரமைக்க வேண்டும். மேலும், மாதிரி கரும்பு தோட்டத்தையும் விவசாயிகளுக்காக உருவாக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags :
× RELATED சிறுமியை ஆபாசமாக வீடியோ எடுத்தவர் கைது