தொழுதூரில் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி வட்டாட்சியரிடம் பொதுமக்கள் முறையீடு

திட்டக்குடி, ஜூன் 11:  தொழுதூர் ஆதிதிராவிட காலனி மக்கள் தெரு ஆக்கிரமிப்புகளை அகற்றி தரும்படி வட்டாட்சியரிடம் முறையிட்டனர். ராமநத்தம் அடுத்துள்ள தொழுதூரில் கடந்த 1996ம் ஆண்டு 158 குடும்பங்களுக்கு ஆதிதிராவிட நலத்துறை மூலம் வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட்டன. இதில் சுமார் 75 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த வீட்டு மனைகளுக்கு செல்ல ஒரே ஒரு தெரு மட்டுமே உள்ளது. இந்த தெருவில் நுழையும் இடத்தில் அப்பகுதியை சேர்ந்த ஒருவர் ஆக்கிரமிப்பு செய்து குடிசை வீடு ஒன்றை கட்டியுள்ளார். இதனால் இப்பகுதி மக்களுக்கு அன்றாடம் நடமாட்டத்துக்குகூட பிரச்னையாக உள்ளது. இந்நிலையில் நேற்று இப்பகுதி மக்கள் திட்டக்குடி தாலுகா அலுவலகம் சென்று தாசில்தார் புகழேந்தியை நேரில் சந்தித்து மனு அளித்தனர். அந்த மனுவில் வரும் 16ம் தேதி தொழுதூரில் மாரியம்மன் கோயிலில் தேரோட்டம் நடைபெற உள்ளது. இவ்விழாவில் பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்ய முடியாத நிலை உள்ளது. ஆக்கிரமிப்பின் காரணமாக தினமும் வெவ்வேறு வழியாகத்தான் வெளியே வரவேண்டி உள்ளது. எனவே தாசில்தார் தலையிட்டு குறிப்பிட்ட ஆக்கிரமிப்பை அகற்றி தரவேண்டும் என முறையிட்டனர். இதற்கு தாசில்தார் அவர்களிடம் ஓரிரு நாட்களில் குறிப்பிட்டபகுதியை நேரில்ஆய்வுசெய்து ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கைஎடுப்பதாக உறுதியளித்தார். இதையேற்றுஅப்பகுதி மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Tags : warden ,
× RELATED மேயர் பதவிக்கு மறைமுகத் தேர்தல் அவசர...