×

நடமாடும் உணவு பரிசோதனை பிரசார வாகனம் துவக்கம்

கடலூர், ஜூன் 11: கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறையின் சார்பில் நடமாடும் உணவு பரிசோதனை பிரசார வாகனத்தினை மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் கொடியசைத்து துவக்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: உணவுபாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறையின் சார்பில் கடலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கும், பொது மக்களுக்கும் உணவு கலப்படத்தை கண்டறிந்திடும் வகையில் நடமாடும் உணவு பரிசோதனை வாகன பிரசாரம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த வாகனம் கடலூர் மாவட்டத்தில் வரும் 29ம் தேதி வரை விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது. தங்கள் பகுதியில் நடமாடும் வாகனம் வரும்போது தங்கள் வீடுகளில் பயன்படுத்தும் உணவு பொருட்களை பரிசோதனைக்கு உட்படுத்தி தரத்தை உறுதி செய்து கொள்ளுமாறும், உணவு கலப்படம் பற்றி அறிந்து கொள்ளுமாறும் கேட்டுக்கொள்கிறோம். மேலும் உணவு தொடர்பான புகார்களுக்கு மாவட்ட அலுவலக எண் 04142-221081ம், ஆணையர், உணவு பாதுகாப்புத்துறை வாட்ஸ் அப் எண் 9444042322ம் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என தெரிவித்தார். இந்த  நிகழ்ச்சியில் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் தட்சணாமூர்த்தி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.  

Tags :
× RELATED சிறுமியை ஆபாசமாக வீடியோ எடுத்தவர் கைது