×

பெற்றோர்கள் வேதனை திருமயம் அருகே மின்கசிவால் வீடு, டீக்கடை சேதம்

திருமயம், ஜூன் 11: திருமயம் அருகே மின்சார கசிவு ஏற்பட்டு வீடு, கடை எரிந்து நாசம், நிவாரணம் வழங்க வேண்டும் என பாதிக்கப்பட்டவர் கோரிக்கை விடுத்துள்ளளார். புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள கடியாபட்டி பஸ் ஸ்டாண்டு பகுதியில் வீட்டோடு டீ கடை,ஹோட்டல் நடத்தி வருபவர் ராமு. இவர் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் கடையை பூட்டிவிட்டு உறங்க சென்றார். நள்ளிரவு ஒரு மணியளவில் மின்சாரம் மெயின் பாக்சில் பலத்த சத்தம் கேட்டுள்ளது.

இதனை தொடர்ந்து ஏற்பட்ட மின்கசிவில் தீ பற்ற ஆரம்பித்தது. இதனை பார்த்த ராமு தீயை அணைக்க முயன்றார். ஆனால் தீ மளமளவென வீட்டின் கூறையில் பற்றியது. இதனால் அதிர்ச்சியடைந்த ராமு வீட்டிற்குள் தூங்கிய மனைவி, குழந்தைகளை வெளியே அழைத்து வந்துவிட்டு திருமயம் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்க போராடினர். இருந்த போதிலும் விட்டிலிருந்த 3 பிரிட்ஜ், ஒரு ஏர்கூலர், வீட்டு உபயோக பொருட்கள் உள்ளிட்ட ரூ.2.50 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகி நாசமாயின. தீயணைப்பு துறையினர் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீ மேலும் பரவாமல் அணைத்தனர். இதனிடையே வீடு, தொழில், உடமைகளை இழந்த நிலையில் அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என ராமு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

உதவித்தொகை கிடைக்கவில்லை:
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரை மையமாக செயல்படும் அறக்கட்டளைவில் விராலிமலை, குன்னண்டார்கோவில், கந்தர்வகோட்டை வட்டாரங்களை சேர்ந்த சுமார் 119 ஊராட்சிகளை சேர்ந்த 107 மாற்றுத்திறனாளிகள் கொடுத்த மனுவில், நாங்கள் பலமுறை மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை கோரி விண்ணப்பித்து உள்ளோம். ஆனால் இதுவரை எங்களுக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை வழங்கப்படவில்லை. எனவே கலெக்டர் நடவடிக்கை எடுத்து எங்களுக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என கூறியிருந்தனர்.

Tags : parents ,housekeeping house ,Tinganai ,
× RELATED மின்வாரிய ஓய்வு பெற்றோர் போராட்டம்