×

மணமேல்குடி அருகே சேவல் சண்டை போட்டி 26 பேர் மீது வழக்கு பதிவு

மணமேல்குடி, ஜூன் 11: மணமேல்குடி அருகே சேவல் சண்டை போட்டி நடத்திய 26 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மணமேல்குடி அடுத்த அத்தாணி கண்மாய் பகுதியில் சேவல் சண்டை போட்டி நடப்பதாக மணமேல்குடி போலீசாருக்கு தகவல் வந்தது. தகவலின் பேரில் இன்ஸ்பெக்டர் ஜெயசித்ரா தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அங்கு போட்டிக்காக வைத்திருந்த 26 சண்டை சேவல்களை பறிமுதல் செய்தனர். மேலும், இது சம்மந்தமாக அறந்தாங்கி ,பேராவூரணி, திருவாப்படி, அத்தாணி, காரக்கொல்லை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 24 பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் .

Tags : Cock fight rally ,Manamkuldi ,
× RELATED மணமேல்குடி பகுதியில் கடும்...