×

பொன்னமராவதி பேருந்து நிலையத்தில் வாகனங்களால் போக்குவரத்து இடையூறு வட்டார போக்குவரத்து அதிகாரி ஆய்வு

பொன்னமராவதி, ஜூன் 11: பொன்னமராவதி பேரூந்து நிலையத்தில் இரு சக்கர மற்றும் மூன்று சக்கர வாகனங்கள் நிறுத்தப்படுவதால் ஏற்படும் போக்குவரத்து இடையூறுகளை வட்டார போக்குவரத்து அதிகாரி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பொன்னமராவதி பேருந்து நிலையத்தில் பேரூந்துகள் செல்வதற்கு இடையூறாக மோட்டார் சைக்கிகள், கார், வேன், டெம்போ உள்ளிட்ட வாகனங்கள் நிறுத்தப்படுகின்றது. இதனை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசு மற்றும் தனியார் போக்குவரத்து தொழிலாளர்கள் சார்பில் புதுக்கோட்டை வட்டார போக்குவரத்து அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு அளித்திருந்தனர்.

இதனையடுத்து நேற்று மாலை வட்டார போக்குவரத்து ஆய்வாளர் செந்தாமரை பொன்னமராவதி பேருந்து நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.அப்போது அரசு மற்றும் தனியார் போக்குவரத்து தொழிலாளர்கள் வட்டார போக்குவரத்து இன்ஸ்பெக்டரிடம் கூறும்போது, பொன்னமராவதி பேருந்து நிலையத்திற்கு பேருந்துகளை இயக்க முடியாத அளவிற்கு இரண்டு சக்கர மற்றும் மூன்று சக்கர வாகனங்கள் நிறுத்தப்படுகின்றது. சனி மற்றும் செவ்வாய் சந்தை கிழமைகளில் பேருந்துகள் பஸ் நிலையத்திற்குள் நுழைய முடியாத அளவிற்கு வாகனங்கள் நிறுத்தப்படுகின்றது. இது குறித்து பேரூராட்சி, காவல்துறையில் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறினர். மேலும் பேருந்து நிலையத்தில் சமீபத்தில் இருசக்கர வாகனம் நிறுத்துவதற்கு கயிறு கட்டியுள்ளனர். பேருந்து நிலையத்தில் தமிழ்நாட்டிலேயே இரு சக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கு இது போன்று செய்யப்படடுள்ளது இங்கு மட்டும் தான் என்றனர். இதுகுறித்து முறையாக நடவடிக்கை எடுப்பதாக வட்டார போக்குவரத்து இன்ஸ்பெக்டர் செந்தாமரை தெரிவித்துள்ளார்.

Tags : Regional Transport Officer ,traffic accidents ,bus stand ,Ponnaravaradi ,
× RELATED வெளி மாவட்ட பதிவெண் கொண்ட வாகன...