டீக்கடையில் மது விற்பதை தடுக்க வேண்டும் கறம்பக்குடி போலீசில் சுயஉதவிகுழு பெண்கள் புகார்

கறம்பக்குடி, ஜூன் 11: கறம்பக்குடி அருகே டீக்கடையில் மது விற்பதை தடுக்க வேண்டும் என்று இன்ஸ்பெக்டரிடம் சுயஉதவிக்குழுவை சேர்ந்த பெண்கள் புகார் மனு கொடுத்தனர். புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே ராங்கியன் விடுதி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள மேலத்தெரு பகுதியில் தளிகை விடுதி கிராமத்தை சேர்ந்த நாகராஜ் என்பவர் டீக்கடை நடத்தி வருகிறார். இவர் கடந்த ஒரு சில மாதத்திற்கு முன்புதான் டீக்கடை தொடங்கினார்.
டீக்கடையின் பின் புறம் அனுமதி இன்றி மது பானம் விற்பனை செய்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் அனைவரும் வேலைக்கு செல்லாமல் மதுவிற்கு அடிமை ஆகி விட்டனர். இதன் காரணமாக அப்பகுதியில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வருவதாகவும், மேலும் யாரும் வேலைக்கு செல்லாமல் குடும்பத்தில் பிரச்சினைகள் ஏற்படுவதால் பெண்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன.

எனவே அப்பகுதியில் உள்ள சுய உதவி குழு பெண்கள் ஏராளமானோர் நேற்று காலை ஒன்று திரண்டு கறம்பக்குடி காவல்நிலையத்திற்கு சென்று இன்ஸ்பெக்டர் களனியப் பணிடம் புகார் மனு கொடுத்தனர். அதில் மேற்கண்ட இடத்தில் செயல்படும் டீக்கடையில் மது விற்பனை நடைபெற்று வருவதை தடுத்து நிறுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர். மனுவை பெற்றுக்கொண்ட இன்ஸ்பெக்டர் உடனடியாக அங்கு விரைந்து சென்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். மேலும் இது குறித்து சுய உதவி குழுக்கள் பெண்கள் கூறும்போது, டீக்கடையில் மது விற்பதால் அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் மதுகுடித்துவிட்டு வேலைக்கு செல்லாமல் இருந்து வருகின்றனர்.
மேலும் அடிக்கடி தகராறு நடப்பதால் நாங்கள் யாரும் வெளியில் செல்ல முடியவில்லை. உடனடியாக டீக்கடையை அகற்ற கோரி மாவட்ட கலெக்டரிடமும் புகார் மனு அளித்துள்ளோம் என்று கூறினர்.

Tags : Karambukudi ,
× RELATED விசி கூட்டத்தில் வலியுறுத்தல்...