×

நீட்தேர்வில் விவசாய தொழிலாளி மகள் 520 மதிப்பெண் பெற்று சாதனை

கறம்பக்குடி ,ஜூன் 11: புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே பல்லவராயன் பத்தை புதுப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்தன். விவசாய தொழிலாளி . இவரது மனைவி பெயர் இந்திராணி. இவர்களுக்கு கீர்த்தனா என்ற மகள் உள்ளார்.
இவர் நன்கு படித்ததால் அரசு ஒதுக்கீட்டின் கீழ் கறம்பக்குடி யில் உள்ள தனியார் பள்ளியில் படித்து பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி 491மதிப்பெண்கள் பெற்றுள்ளார். அதன் பிறகு கந்தர்வகோட்டை பகுதியில் 100சத வீத இட ஒதுக்கீடு அடிப்படையில் மேல் நிலை பள்ளியில் 12ம் வகுப்பில் 1139மதிப்பெண் பெற்று மருத்துவர் ஆக வேண்டும் என்று கடந்த 2017-18 ம் ஆண்டு கல்வியில் நீட் தேர்வு எழுதி வெற்றி பெற்றார்.

அதில் அவர் 220மார்க் எடுத்து தேர்ச்சி பெற்றும் அரசு மருத்துவ கல்லூரி யில் இடம் கிடைக்காததால் மீண்டும் மனம் தளராமல் இந்த ஆண்டு 2018-19ம் ஆண்டு நீட் தேர்வு எழுதினார். இதில் தற்போது அவர் 520 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார். இது குறித்து அவரது பெற்றோர்கள் கூறுகையில், எங்களது மகள் கீர்த்தனா ஆரம்பத்தில் இருந்தே மருத்துவர் ஆக வேண்டும் என்ற நோக்கத்தில் படித்து வந்தார். அதேபோல இந்த வருடம் அவர் நல்ல மதிப்பெண் பெற்றுள்ளார்.
அவரது டாக்டராக வேண்டும் என்ற லட்சியம் நிறைவேறும் வகையில் அரசு மருத்துவ கல்லூரியில் இடம் கிடைக்க வேண்டும் என்பதே எங்களது விருப்பமாக உள்ளது என்று கூறினர்.

Tags : farm worker ,Nader ,
× RELATED நல்வாழ்வுக்கு வழிகாட்டும் போதனைகளை...