×

கலந்தாய்வில் பங்கேற்க அழைப்பு அரியலூரில் குறைதீர் கூட்டம் 373 மனுக்கள் குவிந்தன

அரியலூர், ஜூன் 11: அரியலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர் கூட்டத்தில் 373 கோரிக்கை மனுக்களை பொதுமக்கள் வழங்கினர். அரியலூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் விஜயலட்சுமி தலைமை வகித்தார். இதில் மாற்றுத்திறனாளிகளிடம் கோரிக்கை மனுக்களை பெற்று கொண்டு விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலருக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
பின்னர் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனை பட்டா, தொகுப்பு வீடுகள், திருமண நிதியுதவி திட்டம் போன்ற பல்வேறு கோரிக்கை அடங்கிய 373 மனுக்களை கலெக்டர் விஜயலட்சுமி பெற்று கொண்டார். இதையடுத்து மனுக்கள் மீது சம்மந்தப்பட்டதுறை அலுவலர்கள் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார். கூட்டத்தில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் பரிதாபானு, மாவட்ட வழங்கல் அலுவலர் ரவிசந்திரன் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.

Tags : consultation ,Ariyalur ,meeting ,
× RELATED “அரியலூர் மாவட்டத்தில் சுற்றிய...