வாகனஓட்டிகள் அவதி பென்ஷனர் சங்க கூட்டம்

ஜெயங்கொண்டம், ஜூன் 11: உடையார்பாளையம் நகர அகில பாரத மூத்த குடிமக்கள் மற்றும் பென்ஷனர் கூட்டம், தெற்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடந்தது. தலைவர் விருத்தகாசி தலைமை வகித்தார். பரமசிவம், மாரிமுத்து முன்னிலை வகித்தனர். செயலாளர் அண்ணாமலை அறிக்கை வாசித்தார். பொருளாளர் சிங்காரவேலு வரவு செலவு கணக்கு வாசித்தார். மதிவாணன் தீர்மானங்களை விளக்கி பேசினார். கூட்டத்தில் மத்திய அரசால் உயர்த்தப்பட்ட 3 சதவீத அகவிலைப்படியை உடனடியாக வழங்க கருவூல அலுவலரை கேட்டு கொள்வது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. துணைத்தலைவர் பெரியசாமி நன்றி கூறினார்.

Tags : Aviation Pensioner Association Meeting ,
× RELATED ஜெயங்கொண்டம் பகுதியில் மாற்று கட்சியினர் திமுகவில் இணைந்தனர்