×

சீர்காழி அருகே வர்ணம் பூசாத வேகத்தடையால் தொடர் விபத்து

சீர்காழி, ஜூன் 11: சீர்காழி அருகே சட்டநாதபுரம் கைகாட்டியில் ரவுண்டானா அமைந்துள்ளது. இந்த ரவுண்டானாவில் சீர்காழி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், சிதம்பரம் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் நான்கு சாலைகள் சந்திக்கின்றன. இந்த நான்கு சாலை சந்திக்கும் இடங்களில் வேகத்தடை அமைக்கப்பட்டிருந்தது. ஆனால் கடந்த சில மாதங்களுக்கு முன் சாலைகள் புதிதாக அமைக்கப்பட்டபோது வேகத்தடைகள் அகற்றப்பட்டன. இதனால் அப்பகுதி வழியாக செல்லும் வாகனங்கள் அதிக வேகமாக சென்று வந்ததால் விபத்துக்கள் அடிக்கடி நடந்து வந்தன. இதைத் தொடர்ந்து வேகத்தடைகள் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனர்.  இதனை தொடர்ந்து அந்த பகுதியில் வேகத்தடைகள் அமைக்கப்பட்டன. அமைக்கப்பட்ட வேகத்தடைகள் மூன்று அடுக்குகளாக மிகவும் சிறியதாக அமைக்கப்பட்டுள்ளதால் வாகனங்கள் விழுந்து எழுந்து செல்கின்றன இதனால் வாகனங்களில் பயணம் செல்பவர்களுக்கு பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுகிறது.

மேலும் வேகத்தடைகளில் வர்ணங்கள் பூசாததாள் வேகமாக செல்லும்போது வாகனங்கள் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்கள் ஏற்படும் அபாயம் இருந்து வருகிறது. வேகத்தடை அமைக்கப்பட்ட பகுதியில் அதிக வேகமாக செல்லும்போது வாகனங்கள் பழுதாகி நிற்கிறது சட்டநாதபுரம் கைகாட்டி ரவுண்டானாவில் இருந்து நாகப்பட்டினம் வரை செல்லும் சாலைகளில் அமைக்கப்பட்ட வேகத்தடைகளில் வர்ணம் பூசாமல் காணப்படுகிறது. இதனால் தொடர் விபத்து ஏற்படுகிறது.
எனவே மாவட்ட நிர்வாகம் வேகத்தடைகளை வரையறுக்கப்பட்ட அளவில் அமைத்து வர்ணங்கள் பூசியும் ஒளிரும் விளக்குகள் தகவல் பலகைகள் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : accidents ,painkiller pigmentation ,Sirkazhi ,
× RELATED திருக்கோவிலூர் அருகே இருவேறு...