×

சூறைக்காற்று வீசுவதால் மீனவர்கள் 2வது நாளாக கடலுக்கு செல்லவில்லை

வேதாரண்யம், ஜூன் 11: சூறைக்காற்று அதிகம் வீசுவதால் வேதராண்யம் பகுதி மீனவர்கள் 2வது நாளாக கடலுக்கு செல்லவில்லை.நாகை மாவட்டம் வேதாரண்யம தாலுகா ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம், வௌ்ளப்பள்ளம், வானவன்மாகதேவி, கோடியக்கரை, மணியன்தீவு உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட மீனவ கிராமத்தில் கடலில் காற்று அதிகமாக வீசுவதால் சுமார் 5000 பைபர் படகு மீனவர்கள் இரண்டாவது நாளாக மீன் பிடிக்க செல்லவில்லை. மீனவர்கள் மீன் பிடிக்க செல்லாததால் படகுகள் அனைத்தும் கரையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. கடல் சீற்றமாக காணப்படுவதால் பைபர் படகு மீனவர்கள் முற்றிலும் மீன்பிடிக்க செல்லவில்லை.

பெரும்பாலான மீனவர்கள் வீட்டிலேயே முடங்கினர். ஒருசில மீனவர்கள் தங்கள் வலைகளை பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து 2 நாட்களாக 50 முதல் 70 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசிவருவதால் மின்சார கம்பங்களுக்கு இடையே செல்லும் கம்பிகள் காற்றில் பின்னிக்கொண்டு அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. அடிக்கடி ஏற்படும் இந்த மின்தடையால் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டம் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. மண்ணோடு சேர்ந்து காற்று வீசுவதால் இருசக்கர வாகன ஓட்டிகளும் நடந்து செல்பவர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

Tags : fishermen ,sea ,storm ,
× RELATED விசாகப்பட்டினத்தில் பரபரப்பு...