பள்ளி, கல்லூரி, ஐடிஐ படிக்கும் மாணவர்கள் விடுதிகளில் சேர விண்ணப்பங்கள் வரவேற்பு

கீழ்வேளூர், ஜூன் 11: நாகை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரி, ஐடிஐ விடுதிகளில் தங்கி படிக்க மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நாகை கலெக்டர் சுரேஷ்குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: .நாகை மாவட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கென 17 விடுதிகளும், பள்ளி மாணவிகளுக்கென 15 விடுதிகளும், கல்லூரி மாணவர்களுக்கென 2 விடுதிகளும், கல்லூரி மாணவிகளுக்கென 4 விடுதிகளும் இயங்கி வருகின்றன. பள்ளி விடுதிகளில் 4 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளும், கல்லூரி, பாலிடெக்னிக், ஐடிஐ விடுதிகளில் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு மற்றும் பாலிடெக்னிக், ஐ.டி.ஐ. படிப்புகளில் பயிலும் மாணவ, மாணவிகள் சேரத் தகுதியுடையவர்கள் குறிப்பிட்ட விகிதாச்சார அடிப்படையில் சோத்து கொள்ளப்படுகின்றனர்.

விடுதிகளில் எவ்வித செலவினமும் இல்லாமலும் சலுகைகள் இலவசமாக வழங்கப்படுகின்றன. அனைத்து விடுதி மாணவ, மாணவிகளுக்கும் உணவு தங்கும் வசதியும் அளிக்கப்படும். 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணணவிகளுக்கு சிறப்பு வழிகாட்டிகள் வழங்கப்படும். தகுதியுடைய மாணவ, மாணவிகள் விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர் அல்லது மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அங்கேயே வழங்கலாம். பள்ளி விடுதிகளுக்கு 20.6.2019 அன்றும், கல்லூரி விடுதிகளுக்கு 15.7.2019 சமர்ப்பிக்க கடைசி நாளாகும். விடுதியில் சேரும்பொழுது சாதி மற்றும் பெற்றோரது ஆண்டு வருமானம் குறித்த சான்றிதழ்கள் வழங்கலாம்.இவ்வாறு செய்திக்குறிப்பில் நாகை கலெக்டர் சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

Tags : school ,ITI ,hostels ,
× RELATED பள்ளி, கல்லூரி மாணவர்களை குறிவைத்து போதை மாத்திரை விற்ற 5 பேர் கைது