×

காரைக்காலில் பைக் திருடர்கள் 3 பேர் கைது

காரைக்கால், ஜூன் 11: காரைக்கால் நகர காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஏழுமலை மற்றும் போலீசார் காரைக்கால் பைபாஸ் சாலையில் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக வந்த ஒரு பைக்கை நிறுத்தி விசாரித்தபோது பைக்கில் வந்த நாகை மாவட்டம் நம்பியார் நகரைச் சேர்ந்த பிரகாஷ்ராஜ் ( 20) மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய இருவரும் முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறினர். தொடர்நது இருவரையும் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை செய்தனர். விசாரணையில் ஓட்டி வந்த பைக் காரைக்காலில் திருடப்பட்டது என்றும், மேலும் திருமலைராயன்பட்டினம் மற்றும் காரைக்காலில் 3 பைக்குகளை திருடியதையும் அவர்கள் ஒப்புக் கொண்டனர். தொடர் விசாரணையில் இந்த திருட்டில் நாகை மாவட்டத்தை சேர்ந்த குணாளன் (19), ஸ்டீபன் (20) ஆகியோருக்கு சம்பந்தம் இருப்பது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து பிரகாஷ்ராஜ் என்ற 17 வயது சிறுவன் மற்றும் குணாளன் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து 4 பைக்குகளை பறிமுதல் செய்தனர். தலைமறைவாக உள்ள ஸ்டீபனை போலீசார் தேடி வருகின்றனர்

Tags : thieves ,Karaikal ,
× RELATED காரைக்காலை சேர்ந்த ஒரு இளம்பெண்ணுக்கு கொரோனா பாதிப்பு உறுதி